சும்மா அட்டெம்ப்ட் தான்...பயந்துடாதீங்க...நீங்க நினைக்குற மாதிரி ஒண்ணும் நடக்கல...!
ஒரு காலத்தில் தமிழ்ப்படங்களில் கற்பழிப்புக் காட்சிகள் இருந்தால் அதை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து ரசித்தனர். நிஜமாக நடப்பது போலவே படமாக்குவர். நாயகியின் ஆடைகளை ஒவ்வொன்றாகக் களைந்து வீசுவார் வில்லன். அவை எல்லாம் மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியில் போய் விழும்.
அதன்பிறகு புலி மானை வேட்டையாடிய படத்தைத் தான் காட்டுவார்கள். அல்லது லைட் வெட்டி வெட்டி எரியும். அல்லது பாம்பை பருந்து வேட்டையாடும். அல்லது குழாயில் இருந்து நீர் சொட்டு சொட்டாக விழும். மாடும், குதிரையும் வெட்கப்படும். இப்படி சுவாரசியமான காட்சிகளை 80ஸ் குட்டீஸ் பார்த்து ரசித்திருப்பார்கள்.
ஆனால் நாம் இப்போது பார்க்க இருப்பது கற்பழிப்புக்கான முயற்சிகள் தான். அது எந்தெந்தப் படங்களில் வருகிறது? கற்பழிப்பு முயற்சி நடந்தால் நாயகன் எங்கிருந்தாலும் அங்கு பறந்து வந்து விடுவான். எம்ஜிஆரின் பல படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்கலாம். வில்லன்னா இப்படித் தான் பெண் மோகம் கொண்டு அலைவான் என்பதைக் காட்ட இப்படிப்பட்ட காட்சிகள் வைக்கப்பட்டன.
அபூர்வசகோதரர்கள்
1949ல் வெளியான படம். காம உணர்ச்சிக்கு ஆளான தம்பி அண்ணனின் காதலியைக் கற்பழிக்க முயற்சிக்கிறான். அந்த நேரம் பார்த்து அண்ணன் அங்கு வந்து காதலியைக் காப்பாற்றி விடுகிறான்.
நீரும் நெருப்பும்
1971ல் வெளியானது. இதில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அண்ணனின் காதலியை தம்பி எம்ஜிஆர் அடையத் துடிக்கிறார். அண்ணன் எம்ஜிஆர் வந்து காப்பாற்றி விடுகிறார்.
கூண்டுக்கிளி
1954ல் வெளியானது. தனக்கு கிடைக்காத பெண் மங்களா மீது ஜீவா காமம் கொண்டு அலைகிறான். அவளோ அவனது நண்பன் தங்கராசுவை மணமுடிக்கிறாள்.
அப்படி இருந்தும் ஜீவாவுக்கு அவள் மீதான மோகம் தணியவில்லை. பெற்றோரால் விரட்டப்பட்ட ஜீவா தங்கராசுவின் வீட்டிலேயே தங்க நேர்கிறது. அங்கு மங்களாவைக் கற்பழிக்க முயற்சிக்கிறான்.
அவளோ அவனுக்கு புத்திமதிகள் கூறுகிறாள். தங்கராசு செய்த தவறுக்காக சிறை செல்ல நேர்கிறது. இந்த சமயத்தில் ஜீவா இதுதான் தருணம் எனக் கருதி மீண்டும் மங்களாவை அடைய முயல்கிறான்.
அப்போது மின்னல் தாக்கி பார்வை இழக்கிறான். அவளது கற்பு காப்பாற்றப்படுகிறது. ஜீவாவாக சிவாஜியும், தங்கராசாக எம்ஜிஆரும் நடித்துள்ளனர். எம்ஜிஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.
பராசக்தி
1952ல் வெளியான இந்தப்படத்தில் சாமி கும்பிட வந்த இளம் விதவை கல்யாணியைக்காளி கோவில் பூசாரி கற்பழிக்க முயல்கிறான். அப்போது அவளது கிறுக்கண்ணன் தலையிட்டு பெண்ணின் கற்பைக் காப்பாற்றுகிறான்.
பதினாறு வயதினிலே
1977ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான படம். ரஜினியும், கமலும் இணைந்து நடித்த படம்.
மயிலை அடையத் துடிக்கிறார் பரட்டை. அவளைக் கற்பழிக்க முயற்சிக்கையில் சப்பாணி அவன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்கிறான். பரட்டையாக ரஜினியும், சப்பாணியாக கமலும் நடித்துள்ளனர். மயிலாக வருகிறாள் ஸ்ரீதேவி.
குருதிப்புனல்
1995ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பி.சி.ஸ்ரீராம். போலீஸ் அதிகாரியான நாயகன் வீட்டில் திட்டமிட்டு மிரட்டி தங்குகிறான் தீவிரவாத இளைஞன். அவ்வீட்டிற்கு வரும் போலீஸ் அதிகாரியின் இளம் மகளை மிரட்டி கற்பழிக்க முயல்கிறான்.
நாயகி அவளைத் தப்பவிட்டு தான் உடன்படுவதாகச் சொல்லி பிறகு அவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறாள். கமல், கௌதமி நடித்த மாபெரும் வெற்றிப்படம்.