தமிழ் சினிமாவின் சோக நிலைமை.! ஒரே அறிக்கையில் ஊருக்கே வெளிச்சம் போட்டு கட்டிட்டாங்க.!

by Manikandan |
தமிழ் சினிமாவின் சோக நிலைமை.! ஒரே அறிக்கையில் ஊருக்கே வெளிச்சம் போட்டு கட்டிட்டாங்க.!
X

தமிழ் சினிமா முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் கைகளிலும், கதாசிரியர்கள் கைகளிலும் இருந்தது. அப்போது படத்தின் கதைகளுக்கு ஏற்றவாறு கதாநாயகர்களை தயாரிப்பாளர்கள் புக் செய்து படத்தை எடுத்து முடிப்பார்கள்.

அந்த படத்தை எடுத்து முடித்த பிறகு நடிகர் தனது அடுத்த படத்தை நோக்கி சென்று விடுவார். இந்த படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது மொத்தம் முடிவும் தயாரிப்பாளர்கள் வசமே இருக்கும். தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட தேதியில் அதனை ரிலீஸ் செய்து லாபம் பார்த்து வந்தனர்.

valimai

அதன் பிறகு ரஜினி, கமல் காலம் கடந்து, விஜய் - அஜித் காலம் வந்த பிறகு தற்போது தமிழ் சினிமா கதாநாயகர்கள் கையில் மாட்டி கொண்டு விட்டது என்பது அண்மை காலமாக நிரூபணமாகி வருகிறது.

beast_main

விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. அதே நாளில் KGF-2 போன்ற பெரிய படங்கள் வருவதால், பீஸ்ட் படத்தின் ரிலீசை தள்ளி வைத்தால் அதிக லாபம் கிடைக்கும் என தயாரிப்பு தரப்பு யோசித்ததாம். ஆனால், விஜய் தனக்கு ஏப்ரல் 14 மிகவும் உகந்த நாள் என அந்த தேதியை விட்டு தர மறுத்து விட்டாராம். அதன்காரணமாக தற்போது பீஸ்ட் திரைப்படமும் கேஜிஎப்-2 திரைப்படமும் ஒரே நாளில் ரிலிசாகும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் - செஞ்ச பாவத்திற்கு பரிகாரம் தேடும் H.வினோத்.! அந்த மனிதர் ஏற்றுக்கொள்வாரா.?!

இதனால் பீஸ்ட் திரைப்படத்தின் மொத்த வசூல் பாதிக்கும் என கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. பீஸ்ட்டிற்கு மற்ற ஏரியாக்களில் வசூல் பாதிக்கப்படும் என்று தான் கூறப்படுகிறது.

அதேபோல தான், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த தேதியில் ராஜமௌலியின் RRR திரைப்படம் வெளியாக உள்ளதால் டான் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு லைகா தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது.

அந்த அறிக்கையில் ரிலீஸ் தேதியை மாற்றி அமைக்க ஒப்புக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஒரு அறிக்கையின் மூலம் தற்சமயம் தமிழ் சினிமா கதாநாயகர்கள் கையில் சிக்கிக் கொண்டது வெட்ட வெளிச்சமாக வெளி உலகிற்கு தெரியவந்து விட்டது. ஒரு நடிகரின் படத்தை தயாரித்து அந்த நடிகரின் விருப்பப்படி ரிலீஸ்தேதியை குறிக்கும் அவல நிலைக்கு தற்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று சினிமாவாசிகள் வந்து கொண்டுள்ளனர்.

Next Story