Jananayagan: சினிமா அழிந்துவிடும்!.. அயோக்கிய அரசியல்வாதிகள்!.. இயக்குனர்கள் கோபம்!…

Published on: January 8, 2026
jananayagan
---Advertisement---

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. எனவே படம் நாளை வெளியாகாது. ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. கடந்த டிசம்பர் 18ம் தேதி சென்சருக்காக படக்குகுழு அணுகியுள்ளது. படத்தைப் பார்த்து தணிக்கை அதிகாரிகள் சில மாறுதல்களை சொல்ல இயக்குனர் அதையும் செய்து கொடுத்துவிட்டார்.

ஆனால் 10 நாட்கள் ஆகியும் சென்சார் கொடுக்கப்படவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில்தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. இது விஜய் ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகிலும் கோபப்படுத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்க்கு ஆதரவாக குரல்களும் எழுந்துள்ளது.

Also Read

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமீர் ‘ஒரு சினிமாவை ரிலீஸ் பண்ண விடாமல் தடுத்துட்டா அவங்கள வழிக்கு கொண்டு வரலாம்னு நினைக்குற உங்க நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானது. இந்த நாட்டில் அதிகாரத்தை யார் கையில் கொடுக்கணும்னு மக்கள்தானே முடிவு பண்றாங்க!.. அயோக்கிய அரசியல்வாதிகள் அல்ல’ என பொங்கி இருக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளத்தில் ‘பெரும் பட்ஜெட் படங்களுக்கு இந்திய மற்றும் சில வெளிநாட்டு தணிக்கை குழுக்களின் காலக்கெடு விதிகள் மிகவும் சவாலாக இருக்கிறது. இதனால் முன்பே வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்ட படங்களில் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகளில் படைப்பு சுதந்திரத்திற்கு நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது வெளியீட்டுக்கு மூனு மாதங்களுக்கு முன்பே படம் முழுமையாக தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இது நடைமுறையில் சாத்தியம் இல்லை.. தணிக்கை வாரியம், தயாரிப்பாளர்கள், பெரிய நடிகர்கள் இணைந்து இதை சீரமைத்து எளிமைப்படுத்த வேண்டும்.. பண்டிகை கால பட வெளியீடுகள் தள்ளி போனால் காலப்போக்கில் திரைத்துறை அழிந்துவிடும்’ என பதிவிட்டிருக்கிறார்.

மேலும் விஜயை வைத்துக் கோட் படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு ‘எது எப்படி ஆனாலும் சரி.. இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய Farewell படமாக இருக்கும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.