Gossip: இனி ஓவர் கிளாமர் நோ… இரண்டாம் மனைவிக்கு கண்டிஷன் போட்ட வாரிசு நடிகர்..

Published On: March 18, 2025
Kisu Kisu

Gossip: சமீபத்தில் கோலாகலமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட வாரிசு நடிகர் தன்னுடைய மனைவிக்கு தற்போது ஒரு கண்டிஷனை போட்டிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அக்கட தேசத்தில் மிகப்பெரிய ஹீரோவிற்கு மகனாகப் பிறந்தாலும் நடிப்பில் இன்னும் கரை சேராத நடிகர். தமிழில் இருந்து அக்கட தேசத்தில் ஹிட் கொடுத்த ரோஸ் மில்க் நடிகை காதலித்தார். இதனால் தமிழ் ரசிகர்களும் இந்த ஜோடியை மிகப்பெரிய அளவில் விரும்பத் தொடங்கினர்.

காதலியின் புகழால் வாரிசு நடிகருக்கும் ரசிகர்களிடம் புகழ் கிடைக்க தொடங்கியது. ஆனால் அடுத்த நான்கு வருடத்தில் இருவரும் திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். இதில் தம்பதிகளை விட ரசிகர்கள் தான் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி ஆகினர்.

இதற்கு காரணமாக நடிகை சமீபத்தில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஓவர் கிளாமரில் ஆடிய ஒற்றைப் பாடல் தான் காரணம் எனவும் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றிலும் ரொம்ப ஓபனாக நடித்தார்.

இவர்கள் விவாகரத்தின்போது இதுவும் காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் வாரிசு நடிகர் தற்போது இன்னொரு காவிய பட நடிகையை இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே அம்மணியை வாரிசு நடிகரின் ஹீரோ அப்பாவே ஹாட் என பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் வாரிசு நடிகர் தன்னுடைய திருமண முடிந்த கையோடு இனி ஓவர் கிளாமரில் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் அடக்கி வாசிக்கவும் ஆர்டர் பறந்து இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

இதனால் தான் அம்மணி சமீப காலமாக ஓவர் அடக்கத்தில் போஸ்ட் போட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தும் தங்களுடைய திருமணம் குறித்து வாரிசு நடிகர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் இந்த போஸ்டையும் வெளியிடாமல் இருப்பதும் ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.