Gossip: ஓவர் ஆட்டம் போடும் சன் நடிகர்… தேசிய விருது இயக்குனரையே சீண்டிய சம்பவம்…

Gossip: தமிழ் சினிமாவில் நல்ல பிள்ளை நடிகர் என்ற பெயர் பெற்ற சன் நடிகருக்கு கடந்த சில வருடங்களாகவே பேர் கெட்டு போய் கொண்டு இருப்பது ரசிகர்களுக்கே அதிர்ச்சியான சம்பவமாக மாறி இருக்கிறது. வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் தனி…

Gossip: தமிழ் சினிமாவில் நல்ல பிள்ளை நடிகர் என்ற பெயர் பெற்ற சன் நடிகருக்கு கடந்த சில வருடங்களாகவே பேர் கெட்டு போய் கொண்டு இருப்பது ரசிகர்களுக்கே அதிர்ச்சியான சம்பவமாக மாறி இருக்கிறது.

வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் தனி இடம் பிடித்தவர் சன் நடிகர். ஒவ்வொரு கதையிலும் வித்தியாசம் காட்டி முன்னணி நடிகர்களில் முக்கிய இடம் பிடித்தார். அதிலும் சில வருடங்களுக்கு முன்னர் அவர் நடிப்பில் வெளியான படம் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

வளர்ந்து வந்த நேரத்தில் இவரின் பிரைட் நடிகை மனைவி கொடுத்த ஐடியாவே எல்லாத்துக்கும் பிரச்னையாக முடிந்தது. இங்கு இருந்த புகழை விட அக்கட தேசத்தில் பெரிய இடம் பிடிக்கலாம் என உசுப்பேத்தி விட இவருக்கும் அந்த ஆசை இருந்தது போல.

குடும்பத்துடன் அந்த பக்கம் குடியேற வாய்ப்பும் தேட துவங்கினார். இவருக்கு வாய்ப்பு கிடைச்சதோ என்னவோ மனைவிக்கு வெப்சீரிஸ், திரைப்படம் என மீண்டும் ஒரு ரவுண்ட் அடிக்க துவங்கினார். சன் நடிகரோ இருக்க இடத்தை விட்டோமேனு பல மாதங்கள் கழித்து சிந்து மீண்டும் தமிழ் பக்கம் தலைக்காட்டினார்.

ஆனால் அவர் இருந்த இடம் கூட இப்போ இல்லை. வெளிவந்த கடைசி இரண்டு படமே பெரிய அடி வாங்கியது. இந்நிலையில் ரசிகர்கள் இவர் நடிப்பில் அந்த பராம்பரிய விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.

சில மாதம் முன்னர் கூட தயாரிப்பாளர் மற்றும் அந்த தேசிய விருது இயக்குனரும் ஒரு மீட்டிங்கை போட்டு பில்டப்பை ஏற்படுத்தினார். ஆனால் இப்போ அந்த படமே ஆட்டம் கண்டு இருக்கிறதாம். இவர் அந்த இயக்குனரிடம் உடனே ஸ்கிரிப்ட்டை கொடுங்க என்று கேட்டு இருக்கிறார்.

ஆனால் அந்த இயக்குனருக்கோ அந்த பழக்கமே இல்லையாம். இதுமட்டுமல்ல மற்ற படங்களுக்கு இடையில் இதற்கு கால்ஷூட் தருவதாக சொல்லி இருக்கிறார். இதுவும் அந்த இயக்குனர் செட்டாகாத விஷயமாம். ஒரு நடிகரை லாக் செய்தால் அடுத்த இரண்டு வருடத்திற்கு விடமாட்டார்.

இவர் இப்படி திமிருக்காட்ட நீங்க மத்த படங்களை முடிங்க. அப்புறம் பார்ப்போம் என இயக்குனர் வம்பு நடிகருடன் கைக்கோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *