Gossip: தமிழ் சினிமாவில் உச்ச நடிகரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய அப்பன், மகன் கடவுள் பேர் கொண்ட நடிகருக்கு தன்னுடைய பட இயக்குனருடன் தற்போது மல்லுக்கட்டும் ஒரு பிரச்னை வெடித்து இருக்கிறதாம்.
டிவியில் வளர்ந்து வந்த நடிகரை சுள்ளான் நடிகர் தன்னுடைய நம்பர் படம் மூலம் கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். அப்பன், மகன் கடவுள் பேர் கொண்ட நடிகர் நடிப்பை பார்த்து பிரமித்த சுள்ளான் ’நீ வேற லெவல்யா. உனக்கு நானே படம் எடுக்கிறேன்’ என்று ஒரு படத்தை தயாரித்து கொடுத்தார்.
அங்கு தொடங்கிய இவர் வளர்ச்சி இன்று தமிழ் சினிமாவில் ஹிட் நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது அப்பன், மகன் கடவுள் பேர் கொண்ட நடிகர் கோலிவுட் ஹிட் இயக்குனர்களுடம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் தமிழ்நாட்டின் தலைநகர டைட்டிலிலும், பழம்பெரும் மாஸ் ஹிட் பட டைட்டிலிலும் நடிக்கிறார்.
இரண்டு படமுமே வெவ்வெறு கெட்டப்பில் இருப்பதால் தற்போது பிரச்னை வெடிக்க தொடங்கி இருக்கிறது. இதில் தமிழ்நாட்டு தலைநகர் பெயர் கொண்ட படத்தின் இயக்குனர் அக்கட தேசத்தில் ஒரு சூப்பர்ஸ்டார் நடிகரை இயக்கி வருகிறார். அந்த படம் இந்த மாதம் ரிலீஸாக இருப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு இவரை பிடிக்க முடியாதாம்.
இவர் அடுத்த மாதம் மேல் வரும் போது பழம்பெரும் மாஸ் ஹிட் டைட்டில் படத்தில் அப்பன், மகன் கடவுள் பேர் கொண்ட நடிகர் பிஸியாகி விடுவார். அதுவும் அந்த படத்தில் நடிகருக்கு தாடி இல்லையாம். ஆனால் உச்ச நடிகரின் இயக்குனர் படத்தில் தாடி வேணுமாம்.
இந்த பிரச்னை பழம்பெரும் மாஸ் ஹிட் பட அறிவிப்பில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறதாம். இவர்கள் ரெண்டு பேரும் அடித்துக்கொண்டு தங்கள் ஈகோவிற்கு படத்தின் தயாரிப்பாளரை சீக்கிரம் முடிச்சிக்கொடுங்கப்பா என புலம்ப வைத்துள்ளார்களாம்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…