Categories: latest news

Gossip: மனைவியுடன் ஜாயிண்ட் அடிக்க பிளான் போடும் சுள்ளான் நடிகர்… எதற்கு இந்த திடீர் முடிவாம்?

Gossip: சுள்ளான் நடிகர் தன்னுடைய பிரபல மனைவியை திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதுவே பலருக்கு பெரிய அளவில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. 18 வருட வாழ்க்கை ஏன் முடிக்கிறார் எனக் கேள்விகளும் எழுந்தது.

தமிழ் சினிமாவின் பிரபல டாப் ஹிட் நடிகரின் மகளை காதலித்து மணம் முடித்தார் சுள்ளான். இருவருமே சின்ன வயதில் கல்யாணம் செய்துக்கொண்டனர். பல வதந்திகளுக்கு மத்தியில் இந்த ஜோடி பல வருடமாக ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்தனர்.

ஒருக்கட்டத்தில் நடிகர் தமிழ் டூ டாப் மொழி வரை பயணம் செய்தார். பல படங்கள் இருக்கும் ஏகப்பட்ட விருதையும் தட்டி வந்தார். ஒரு கட்டத்தில் நடிகருடன் இருந்த பிரபலங்கள் வரிசையாக விவாகரத்தை அறிவிக்க இவர் மேல் பழி விழுந்தது.

இந்த சுள்ளான் நடிகர் தான் இந்த எல்லா ஜோடியின் பிரிவிற்கும் காரணம் என கிசுகிசுத்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த சுள்ளான் நடிகரும் தன்னுடைய கல்யாண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அறிவித்தார்.

முதலில் அறிவிப்புடன் முடிக்க பின்னர் கடந்தாண்டு கோர்ட் படியேறி முறையாக விவாகரத்தையும் பெற்று விட்டார். ஆனால் மற்ற தம்பதிகள் போல இருவரும் உடனே இன்னொரு வாழ்க்கை ஐடியாவிற்கு கூட போகாமல் அமைதியாக தங்கள் கேரியரை எடுத்து சென்றனர்.

இந்நிலையில் இத்தம்பதியின் மூத்த மகன் பள்ளி விழாவில் இருவரும் மீண்டும் ஜோடியாக வந்து வாழ்த்திய புகைப்படம் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது எதேர்ச்சையாக நடந்து கொண்டு விஷயம் இல்லையாம்.

இருவருக்குமே இருந்த மனக்கசப்பு கொஞ்சம் குறைந்து இருப்பதாலும் தன்னுடைய பிள்ளைகளின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தன்னுடைய இமேஜை காப்பாற்றிக்கொள்ளவே முக்கிய முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Published by
ராம் சுதன்