Categories: latest news tamil cinema gossips

Gossip: ஓவர் சீன் போடும் பெத்த பாஸ் மூன்றெழுத்து நாயகன்… தலையில் துண்டு போடும் தயாரிப்பாளர்கள்

Gossip: பெத்த பாஸில் டைட்டிலை தட்டும் நிலையில் இருந்து தற்போது சினிமாவில் முன்னணியில் இருக்கும் மூன்றெழுத்து நாயகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் போடும் சீன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.

சின்னத்திரையில் சூப்பர்ஸ்டாரின் சமீபத்திய பட டைட்டில் கேரக்டரில் நடித்து ஹிட்டடித்தவர் மூன்றெழுத்து நடிகர். பின்னர் அந்த பெத்த பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 100 நாள் நிகழ்ச்சியை அவர் தன் கூடாரமாக்கினார். முதலில் தன்னுடைய இடத்தை தக்க வைத்து கொள்ள நாயகியை லவ்வினார்.

அதிலே இவருக்கு நெகட்டிவ் விமர்சனம் குவிந்தது. உடனே அந்த ஹீரோயினை கழட்டிவிட்டு புதிதாக வந்த அக்கட தேசத்தின் பைங்கிளியை பிடித்து லவ்வினார். அதுமட்டுமல்லாமல் ஆண் போட்டியாளர்களை சேத்துக்கொண்டு மற்றவர்களை அழகாக வெளியேற்றினார்.

ஆனால் கர்மா விளைவு தலைவருக்கு மிஞ்சியது பணப்பெட்டி தான். அதை தொடர்ந்து வெளியில் வந்து நடிக்க தொடங்கினார். அதில் அவருக்கு வரிசையாக வெற்றி படங்களே கிடைத்தது. அதிலும் சமீபத்தில் அவரை அடுத்த முக்கிய ஸ்டார் பட்டியலில் வைத்தனர்.

இதில் மீண்டும் தலைக்கனம் தலை தூக்கி விட்டது போல. அந்த பந்தா நம்பர் நடிகையுடன் நடிப்பது வேறு திமிர்த்தனமாக நடந்து கொள்கிறாராம். இதனால் மட்டுமில்லாமல் ஷூட்டிங்கில் மேல் மாடி ஏறுவதற்கு கூட லிப்ட்டை சரி பண்ண சொல்லி சண்டை போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இனிமே அடுத்த கட்டத்துக்கு போக போவதாகவும் அதனால் ஷூட்டிங்கில் மாஸ் ஹீரோ கணக்கில் அலும்பு செய்து கொண்டு இருக்காராம். அடுத்து வரிசையாக அவரை நம்பி படங்கள் வருவதால் யார் பேச்சை கேட்காமல் நடந்து வருவதாகவும் கிசுகிசுத்து கொள்கின்றனர்.

Published by
ராம் சுதன்