1. Home
  2. Gossips

தயாரிப்பாளரைப் பாடாய் படுத்தும் நம்பர் நடிகை... அவர் மட்டுமா அந்த நடிகரும் அப்படித்தானே!

தமிழ்சினிமா கிசுகிசுல இங்க என்ன சொல்லுது?

இன்று தமிழ்ப்பட உலகில் தயாரிப்பாளர் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. காரணம் என்னன்னா ஒரு செலவுக்கு 9 செலவை இழுத்து விட்டு விடுகிறார்கள். அதுல ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டவங்க கூட வளர்ந்ததும் தயாரிப்பாளர்களைப் பாடாய்படுத்துறாங்க.

நம்பர் நடிகையாக இருந்தவர் 8 முதல் 10 உதவியாளர்களை சூட்டிங்கிற்கு அழைத்து வருவாராம். அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கச் சொல்வது, சம்பளம் கொடுக்கச் சொல்வது, காருக்கு பெட்ரோல் போடச் சொல்வதுன்னு தயாரிப்பாளரைப் பாடாய்படுத்துவாராம்.

அதுமட்டுமல்லாமல் அவரோட இரு குழந்தைகளுக்கும் ஆயா அம்மாவை வரவழைத்து அவங்களுக்கும் சம்பளம் கொடுக்கச் சொல்றாராம். ஹேர் டிரஸ் பண்ண ஒருத்தர். டீ கொடுக்குறதுக்கு ஒருத்தர். டச் அப் பாய்.

சமையல் ஆளிடம் இருந்து கொண்டு வர்றவரு. மேக்கப் மேன் அப்படின்னு நிறைய உதவியாளர் இருக்காங்க. எல்லாருக்கும் சம்பளம் தயாரிப்பாளர் தான் கொடுக்கணும். இதெல்லாம் இவங்க வாங்கற சம்பளத்துலயே கொடுக்கலாம். 6 கோடி சம்பளம் வாங்கறாங்க.

இந்த செலவே டெய்லி 3 லட்சம் போயிடுது. கேரவன் வாடகை இருக்கு. சாப்பாடு, டீ செலவுன்னு அங்க இருக்குறவங்களுக்கே கொடுக்கணும்.

உச்சத்துல இருக்குற நடிகரு கூட 250 கோடி வாங்கறாரு. அவரு கூட சொந்தமா பண்ணலாம். ஆனா அவரு அப்படி கிடையாது. அதே மாதிரி தயாரிப்பாளர்களுக்கான நடிகர்கள் நிறைய பேரு இருக்காங்க. அதுக்குன்னு ஒத்துழைக்கிற ஆள்களும் இருக்காங்க.

அந்தக் காலத்துல மக்கள் மத்தியில பேரெடுத்த பெரிய நடிகருக்குக் கூட சாப்பாடு வீட்டுல இருந்து வருமாம். செட்ல உள்ள எல்லாருக்குமே சாப்பாடு அவரு வீட்ல இருந்து தான் அதுவும் ஒரே மாதிரியா வருமாம். இன்னைக்கு இப்படி இருக்காங்களே...!

ஆனா தயாரிப்பாளர் தலையில மிளகாய் அரைக்குறவங்க தான் ஜாஸ்தியா இருக்காங்களாம். இனி வரும் காலத்துல தமிழ் இனி மெல்லச் சாகும்னு சொன்ன மாதிரி தமிழ் சினிமா இனி மெல்லச் சாகும்னு சொல்லலாம்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.