அந்த படத்தில் நடித்ததால் லாட்ஜில்… ஓபனாக சொல்லிக்கொண்டு இருக்கும் நம்பர் நடிகை

Published on: July 17, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மாஸ்நாயகியாக வலம் வந்த அந்த நம்பர் நடிகை தற்போது மிகப்பெரிய தொய்வை சந்தித்து வருகிறார். ரவுடி இயக்குனரை கல்யாணம் செய்து நான்கே மாதத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்து இருப்பதாக அறிவித்தார்.

இது பெரிய அளவில் சர்ச்சையானது. நாயகி குறித்து பல யூகங்கள் வெளியானது. இது அவருடைய சினிமா கேரியரில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அம்மணி நடித்த 11 க்கும் அதிகமான திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நம்பர் நடிகையை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

இதனால் நடிகை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரொம்பவே ஆக்டிவாக வலம் வருகிறார். தன்னுடைய பிசினஸ் ப்ரோமோஷன்களையும் செய்து தான் இருக்கிறேன் என்பதை அடிக்கடி தற்போது ரசிகர்களிடம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் பட ப்ரொமோஷனுக்கே வராதவர். தற்போது பல இடங்களில் காணப்படுகிறார்.

இந்நிலையில் அம்மணி தன்னுடைய ஆரம்ப காலத்தில் இந்தியாவுக்கு எதிராக 18 முறை படையெடுத்த அந்த முகமது படத்தில் நடித்தது தவறான முடிவு எனக் இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனக்கு சொன்ன கதை வேறு. ஆனால் தான் நடித்த கதை வேறு எனவும் தெரிவித்திருக்கிறார்.

அப்படத்தில் தன்னை கிளாமராக காட்டி தன்னுடைய கேரியர் ஆரம்பத்திலேயே பெரிய தப்பை செய்து விட்டேன் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே அம்மணி படத்தை முடித்துவிட்டு லாட்ஜில் தன்னுடைய ரூமில் ஒவ்வொரு நாளும் அழுததாகவும் தற்போது தகவல்கள் கசிந்து வருகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.