ஒரே கல்யாணம்தான் மொத்தமாக மார்கெட்டும் போச்சு… வழி தவறும் நம்பர் நடிகை
Actress: தமிழ் சினிமாவில் தற்போதைய காலத்தில் எந்த நடிகைகளுக்கும் கிடைக்காத பெரிய புகழில் இருந்த நம்பர் நடிகை எத்தனை சர்ச்சையில் சிக்கினாலும் கொடிகட்டி பறந்து வந்தார். ஆனால் அந்த இயக்குனருடன் திருமணத்தில் முடிய அதுவே அவரின் மார்க்கெட்டை சரித்து விட்டது.
தனிநாயகியாக திரைப்படங்களில் நடித்து கொடிகட்டி பறந்து வந்தவர் நம்பர் நடிகை. ஹீரோக்களுக்கு இருக்கும் சமமான புகழில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார். அவருடன் இன்னொரு நம்பர் நடிகை போட்டி போட்டால் கூட அவரின் இடத்தை தொட முடியாமல் போனது.
ஆனால் டாப் அம்மணிக்கு நடிகர்கள் உடனான இரண்டு காதல் ஏற்கனவே தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து ரவுடி இயக்குனருடன் காதலில் சிக்கினார். அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களிடம் லைக் கேட்டுக் கொண்டிருந்தது இந்த ஜோடி.
ஒரு கட்டத்தில் இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். எல்லா விதத்திலும் காசு பார்ப்பதில் கெட்டியான நம்பர் நடிகை தன்னுடைய திருமணத்தை ஓடிடி தளத்தில் கோடிக்கணக்கில் விற்பனை செய்தார். ஆனால் அது ரிலீஸ் ஆவதற்கு முன்னே நான்கே மாதத்தில் இரட்டை குழந்தை என தகவல் வர ரசிகர்கள் அதிர்ந்தனர்.
கோலிவுட்டிற்கே இது புதிய விஷயம் என்பதால் அம்மணி பெரிய சர்ச்சையில் சிக்கினார். அதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வந்த எல்லா திரைப்படங்களுமே தோல்வியை தழுவியது. செஃப்பாக நடித்த வட இந்தியாவில் வாங்கி கட்டிக்கொண்டார். டாப் ஹீரோக்கள் அவரை தங்களுடைய படங்களில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர்.
இதனால் அம்மணி தற்போது இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்டம் நாயகர்களுடன் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதனால் ஓவர் மன உளைச்சலில் இருக்கும் நடிகையை ரவுடி இயக்குனர் தான் தற்போது சமாதானப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரு தப்பான முடிவால் இந்த கேரியரையும் விழுந்து விட்டேனே என நெருங்கியவர்களிடம் கதறி வருவதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது.