Gossip: ஓவர் திமிரால் கிடச்ச துப்பாக்கியை இழக்கும் அப்பாசாமி நடிகர்… விட்ட இடத்தை பிடிக்கும் பெரிய கிங் நடிகர்!

Gossip: தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே நடிகர்கள் தங்களுடைய இடங்களை தக்க வைக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் கிடைச்ச வெளிச்சத்தை காலி செய்துக்கொண்டு இருக்கிறார் அப்பாசாமி நடிகர்.
தமிழ் சினிமாவில் மூன்றெழுத்து உச்ச நடிகர் சினிமாவை விட்டு தற்போது அரசியல் பக்கம் தலைக்காட்ட இருக்கிறார். தற்போது கோலிவுட்டில் பெரிய இடத்தில் இருந்ததால் அவர் இடம் தற்போது காலியாகும் என மற்ற நடிகர்கள் ஆசையில் இருந்தனர்.
ஆனால் மூன்றெழுத்து நடிகர் தன்னுடைய கடைசி ஆடு படத்தில் அப்பாசாமி நடிகருக்கு துப்பாக்கியை கொடுத்து ஒரு சீனை நடிக்க இனிமேல் அவர் இடம் எனக்கு தான். அவர் ரசிகர்கள் எனக்கு ரசிகர்கள் என தன்னுடைய பிஆர் டீமை வைத்து பரப்பி கொண்டு இருக்கிறார்.
அதன் காரணமாகவே அவருக்கு அந்த சன் நடிகரின் பழைய பட டைட்டிலை வைத்து உருவாகும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவும் அவர் திமிருக்கு எக்கசக்க காரணமாக மாறி இருப்பதால தன்னுடைய கதை சொல்ல வரும் இயக்குனரிடம் திமிர் காட்டி வருகிறாராம்.

அப்பாசாமி நடிகர் முதலில் அந்த ஆடு படத்தில் அப்படி ஒரு பில்டப் காட்சியை கொடுத்ததற்கு காரணமே அந்த வாரிசு இயக்குனர் தானாம். தனக்கு அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை தருவதாக அவர் கொடுத்த உத்திரவாதத்தின் பேரில் தான் இந்த பில்டப் சீனை வைத்து இருந்தாராம்.
ஆனால் தன்னுடைய மார்க்கெட் உயர பெரிய படங்கள் வாய்ப்பு கிடைத்ததால் தற்போது இந்த வாரிசு இயக்குனரிடமே சீன் காட்டி இருக்கிறார். இன்னும் 2 வருடம் கழிச்சு கால்ஷீட் தரேன் என திமிர்க்காட்டி இருந்தாராம். இதில் கடுப்பான அந்த இயக்குனர் உன் சவகாசமே வேண்டாம் என்ற ரீதியில் அவர் பேச்சையே கட் செய்து இருக்கிறார்.
இதில் கடுப்பானவர் தற்போது மீண்டும் வைரலில் இருக்கும் பெரிய கிங் நடிகரை தன்னுடைய அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டாராம். இவர் மார்க்கெட் ஆட்டம் கண்டு இருந்தது. அவரும் இனிமே நோ வில்லன். ஹீரோவாக தான் நடிப்பேன் என முடிவெடுத்து விட்டாராம்.
அதனால் அவரை உயர்த்திவிட்டு அப்பாசாமி நடிகருக்கு போட்டியாக மீண்டும் நிற்க வைக்கவும் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறதாம். அதனால் தான் பெரிய கிங் நடிகர் படத்துக்கு இப்போ பரபரப்பாகவும் பேசி வருகிறார்களாம்.