Gossip: ஓவர் திமிர் காட்டி கேரியரை காலி செய்ய போகும் காமெடி நடிகர்… இவர் செய்ற கொடுமை இருக்கே?

by AKHILAN |
Gossip: ஓவர் திமிர் காட்டி கேரியரை காலி செய்ய போகும் காமெடி நடிகர்… இவர் செய்ற கொடுமை இருக்கே?
X

Gossip: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு துறையில் யாராவது ஒரு பிரபலம் திமிர் பிடிச்சு நல்லா இருந்த கேரியரை காலி செய்வது வழக்கம். அப்படி இந்த முறை முடியை வைத்து கேரியரை பிடித்த காமெடி பிரபலம் காட்டும் ஓவர் திமிர்த்தனங்களால் பிரச்னை வெடித்துள்ளது.

காமெடியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தவருக்கு திடீரென ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. ஓவர் மாஸ் காட்சி இல்லை என்றாலும் நல்ல கதையில் அவர் படங்கள் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பும் பெற்றது. மனுஷனும் தன்மையா இருக்காரே என புகழும் கிடைத்தது.

அதான் ஹிட்டடிச்சா திமிர் வந்திடுமே என்ற ரீதியில் ஹீரோவானதில் இருந்து ஐயா தன்னிடம் வரும் தயாரிப்பாளர்களிடம் ஓவர் திமிராகவே நடந்து கொள்கிறாராம். சம்பளம் கூட அவர் கணக்கில் இருந்து எப்போதும் மூன்று மடங்கு அதிகமாக கேட்பதை வழக்கமாக வைத்தாராம்.

இதனால் தான் தற்போது சின்ன படங்களில் இவர் தலைக்காட்டுவதும் இல்லையாம். பெரிய பட்ஜெட் படங்களில் கூட சின்ன வேடத்தில் இவரை போடுவதால் கேரியர் பெரிய அள்வில் ஆட்டம் காட்டு இருக்கிறது. அதனால் புரோமோஷனுக்கு கூப்பிட்டால் கூட ஒரு தொகை கேட்கிறாராம்.

நல்லா போயிட்டு இருக்க கேரியரில் இவரே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் விதமாக ஏகப்பட்ட கண்டிஷன்கள் வைப்பதை கூட பொறுத்து கொள்ளும் படக்குழு இவர் கேட்கும் சம்பளம் கேட்டவுடன் ஐய்யோ என்ற ரீதியில் தலைதெறிக்க ஓடிவிடுகின்றனராம். தற்போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததே இவரின் ஐடியாவில் தானாம்.

ஏற்கனவே கேரியர் பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் அமைதியாக இருந்தால் மொத்தமாக முடிந்து விடுவோம் என்பதால் நெகட்டிவ் விமர்சனம் கூட தன்னை காக்கும் என விசயத்தை இவர் தரப்பில் பற்ற வைத்திருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இதனால் மீண்டும் இவர் குறித்து பேச்சுக்கள் வரும் அதை வைத்து விளம்பரம் தேடிக் கொள்ளலாம் என்பது இவரின் நெருங்கிய வட்டாரத்தின் முடிவு என்பதாகவும் தகவல் வந்துள்ளது. பாப்புலாரிட்டிக்காக மனுஷன் எவ்வளவு படுபாதாளத்தில் இறங்கி இருக்கிறார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

நல்ல கேரியரை காசுக்காக சீக்கிரம் மொத்தமாக அழித்து விடுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது.

Next Story