Gossip: சன் நடிகரை அசிங்கப்படுத்த இவ்வளவு கோடியை கொடுத்திருக்கிறாரா துப்பாக்கி வாங்கிய நடிகர்?…

Gossip: தமிழ் சினிமாவில் தற்போது ஏகப்பட்ட போட்டிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தற்போது இன்னொரு பிரபலத்தை மட்டம் தட்டும் சேட்டையும் செய்து வருகின்றனர். அப்படி ஒரு நடிகரின் செயல் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஹீரோக்களின் புகழை உருவாக்கியது அவர்களின் படங்கள் தான். வித்தியாசமான கதையில் நடித்த நடிகர்கள் எக்கசக்க ரசிகர்களை கொண்டு இருப்பார்கள். ஆனால் இது தற்போதைய காலத்தில் மாறி இருக்கிறது.
சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் தற்போது யாரையும் நம்பாமல் ஒரு டீமை வைத்துக்கொண்டு தங்கள் குறித்து பெருமையாக பேச வைத்து கொள்கின்றனர். ஆனால் அது அப்படியே இருந்தால் கூட பரவாயில்லை. இன்னொரு பிரபலத்தை இழுத்து விடும் நிலைக்கு வந்துள்ளனர்.
சின்னத்திரையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த சாமி அப்பா, மகன் நடிகர் ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி கொண்டார். இரண்டாம் கட்ட நடிகராக வலம் வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு டீமை உருவாக்கி வைத்தார். அவர்கள் மூலம் தன்னுடைய பாப்புலாரிட்டியை வளர்த்து கொண்டார். அவர் குறித்து சில மாதங்கள் முன்னர் ஒரு பெரிய கிசுகிசு கிளம்பியது. அந்த இசை பிரபலத்தின் மனைவியுடன் ஒரு பிரச்னை வெடித்தது.
ஆனால் அது பெரிசாக போகாததற்கும் இவர் தான் காரணமாம். 40 லட்சத்துக்கும் அதிகமாக பணத்தினை வாரி இறைத்து அந்த விஷயத்தினை பேச விடாமல் கெடு பிடி வைத்தார். முக்கிய பிரபலத்தின் ஆடு படத்தில் உள்ளே வந்து தனக்கு ஒரு மாஸ் சம்பவத்தை உருவாக்கி கொண்டார்.
இந்நிலையில் அவர் ஆர்மி படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இடத்துக்கு வந்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் ஹெட் நடிகர், கமெண்ட்டர் நடிகர் வெளியேற இவர் அந்த இடத்தினை பிடிக்க ஓவர் அட்ராசிட்டி செய்து வருகிறாராம்.
அதாவது சன் நடிகரின் சமீபத்திய படங்கள் எல்லாமே ஓவர் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. என்னவென்று விசாரித்தால் சாமி அப்பா, மகன் நடிகர் பெரிய கோடியை வாரி இறைத்து இவர் குறித்து தப்பாக பரப்பி சொல்லி கொண்டு இருக்கிறாராம். இதனால் தான் சன் நடிகர் குறித்து நெகட்டிவாக பேசப்பட்டு வருகிறதாம். ஏங்க இப்படியா மோசமா இறங்குவீங்க எனவும் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.