Gossip: மூன்று வார்த்த நெட்டை நடிகைக்கு கல்யாண தொல்லை கொடுக்கும் காதலன்.. ஆனா நியாயம்தானே!

by AKHILAN |
Gossip: மூன்று வார்த்த நெட்டை நடிகைக்கு கல்யாண தொல்லை கொடுக்கும் காதலன்.. ஆனா நியாயம்தானே!
X

Gossip: தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் மட்டுமே டிவியில் இருந்து வந்து ஜொலிக்க முடியும் போல ஹீரோயின்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு கம்மிதான். அந்த வகையில் நியூஸ் வாசித்து கொண்டிருந்த அந்த மூன்று வார்த்தை நெட்ட நடிகைக்கு திடீரென டிவி வாய்ப்பு வந்தது.

ஹீரோ பெயர் இருக்கும் அந்த டிவியில் ஒரு ரீமேக் நிகழ்ச்சியில் நடித்தார். முதல் சீரியலே அம்மா கேரக்டர் என்றாலும் கூட தைரியமாக நடித்தார். ஆனால் நடிப்பு தான் எங்கே என்று தேடும் நிலை இருந்தது. சீரியல் கூட ஆகாஓஹோ என போகவில்லை.

டிஆர்பியில் செம அடி வாங்கி கொண்டு இருந்தது. ஆனால் அம்மணிக்கு ஜாக்பாட் அடித்து தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுத்தார். முதல் படமும் செம ஹிட் இல்லை என்றாலும் சீரியல் நடிகை என்பதால் எளிதாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. ஓரளவுக்கு நல்ல படங்களாக இருந்தாலும் ஹீரோயின் வாய்ப்பு பெரிதாக இல்லை. சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே அம்மணியை ஹீரோயின் லெவலுக்கு ஏற்றினாலும் டாப் ஹீரோக்கள் சைட் ரோல் கொடுத்து வந்தனர்.

இருந்தும் ஒரு ரவுண்ட் வந்துவிடலாம் என அம்மணியும் ஏகப்பட்ட முயற்சியில் இருந்தார். ஆனால் ஒன்னும் வேலைக்கே ஆகவில்லை. இதில் இவர் டிவியில் இருக்கும் போதே காதலிக்கவும் தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட இந்த ஜோடி 15 வருடத்துக்கு மேலாக லவ்ஸ் பண்ணி வருகின்றனர்.

இந்நிலையில் அம்மணி கேரியருக்காக அவர் காதலர் பொறுத்திருந்து இப்போ கடுப்பாகி விட்டாராம். உடனே கல்யாணம் செய்துக்கொள்ளலாம் என வலியுறுத்தி வருகிறாராம். இவரோ ஒரே ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பேன் என விடாப்பிடியாக கல்யாணத்தை தள்ளி போட்டு வருகிறார்.

ஏற்கனவே சைட் ரோல் தான் கிடைக்குது. இதில் கல்யாணம் முடிஞ்சா எட்டி கூட பார்க்க மாட்டாங்க என ஐடியாவில் இருக்கிறார் போல என கோலிவுட் வட்டாரமும் கிசுகிசுத்து வருகிறது. இப்படியே இவர் இழுத்தால் காதலர் பிச்சிக்கிட்டு போகும் அளவுக்கு சண்டை வம்புகள் பத்திக்கொண்டு வருகிறதாம்.

Next Story