Gossip: ஓவர் கிளாமரால் பேரு கெட்ட நடிகை.. இருக்கத கெடுத்துக்க கூடாதுனு இந்த முடிவா?

Gossip: தமிழ் சீரியலில் மிகப்பெரிய ஹிட் ஆக வலம் வந்த நடிகை திடீரென நடிப்பு ஆசையால் தற்போது தன்னுடைய மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால்தான் அவர் அப்படத்தின் எந்த விழாக்களிலும் தலை காட்ட முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் சில நடிகைகளுக்கு மட்டுமே தனி புகழ் கிடைக்கும். அப்படித்தான் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தார் இந்த பெரிய நடிகை. தமிழ் சின்ன திரையால் நிகழ்ச்சியில் ஹிட்டு அடித்த பெரிய முதலாளி நிகழ்ச்சிக்குள் அடி எடுத்து வைத்தார்.
ஆனால் அங்கு கணவரை விவாகரத்து செய்திருப்பதை அரசல் புரசலாக தானாகவே அமுக்கி வாசித்து கிசுகிசுக்களை கிளப்பிவிட்டார். இவருடைய கணவரும் சீரியலில் நடித்து வந்தார். ஆனால் அவர் பக்கம் எந்த தப்பும் இல்லையாம். அம்மணிக்கு திடீரென சினிமா ஆசை வந்ததே இந்த பிரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான அந்த உண்மை சம்பவம் கதையில் அம்மணி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் நடிப்பை எல்லாம் தூர தள்ளி காட்டிய கிளாமர் தான் கண்ணை கூச வைத்தது. சீரியலில் கூட இவ்வளவு இறங்கி பண்ணாதவர் சினிமா வாய்ப்பிற்காக இவ்வளவு இறங்கிப் போக வேண்டுமா என அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
அம்மணிக்கு இருந்த சப்போர்ட் எல்லாம் தற்போது தாறுமாறாகி இருக்கிறது. படத்தில் இருந்த எல்லா நடிகைகளும் ஓவர் கிளாமர் காட்டினாலும் அம்மணி கொஞ்சம் அதிகபட்சம் எனக் கூறப்படுகிறது. இதனாலே இப்படத்தின் விழாக்களில் அம்மணி தலை காட்டவே முடியாமல் போயிருக்கிறது.
சமீபத்தில் நடந்த வெற்றி விழாவில் கூட இவர் வரவில்லை. இதற்கு காரணம் படத்தில் காட்டிய கிளாமரால் அவருக்கு கிடைத்த மோசமான விமர்சனங்கள் தான் என்று கூறப்படுகிறது. ஒழுங்கா கணவரோட வாழலாம். அதை விட்டு சினிமா ஆசையால் இருந்த கொஞ்ச நெஞ்ச பேரையும் கெடுத்துக் கொண்டிருக்கியே என அவருடைய நெருங்கிய வட்டாரமே தற்போது அவரை கடுப்படித்து வருகிறதாம்.