Gossip: ’தங்க குருவி ’ நடிகையை காலி செய்ய பிளான் போட்டது மூன்றெழுத்து உச்ச நடிகரா?!

by AKHILAN |   ( Updated:2025-07-19 06:30:45  )
Gossip: ’தங்க குருவி ’ நடிகையை காலி செய்ய பிளான் போட்டது மூன்றெழுத்து உச்ச நடிகரா?!
X

Gossip: சினிமாத்துறையில் ஒரு நடிகைக்கு வாய்ப்புகள் குவியும். ஆனால் அவர் சில வருடங்களிலே காணாமல் போய் விடுவார். என்ன காரணம் என தேடினால் பலருக்கு அதற்கான காரணமே தெரியாது. அதிலும் அந்த நடிகைக்கு சம்மந்தமே இல்லாமல் நெகட்டிவ் விமர்சனங்களும் குவியும்.

இப்படி தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகையாக இருந்தவர் தங்க குருவி நடிகை. ரவுடி, மருத்துவர் உள்ளிட்ட பல முன்னணி படங்களில் நடித்தவர் திடீரென கடந்த சில மாதங்களாகவே பயங்கரமான எதிர்வினைகள் வந்ததைக் கவனித்தீர்களா?

அதிலும் அவர் ஒரு ரசிகரிடம் "ஸ்டாக் பண்ணாதீங்க" என சொல்லி, பின்னர் அவருடன் செல்ஃபி எடுத்தார். அதே சம்பவத்தில் அவருக்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. மேலும், நடிகைக்கு "அட்டிட்யூட் அதிகம்" என குறை சொல்லப்படும் அளவுக்கு பிரச்னை ஆனது.

அதிலும் திடீரென நடிகையின் நடிப்பு முதல் நடனம், பேச்சு, உடை உள்பட எல்லாமே விமர்சனங்களுக்குள்ளானது. இந்த மாறுபாடு எப்போது ஆரம்பித்தது தெரியுமா? அவர் ஒரு பிரபல PR நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகுதான். அந்த நிறுவனத்தை நடந்தி வந்தவர் அந்த மூன்றெழுத்து உச்ச நடிகரின் ஆஸ்தான ஆள் ஒருவராம்.

சினிமாவை விட்டு கட்சிக்கு தாவி இருக்கும் அந்த நடிகருக்கு இவர் தான் ரொம்ப க்ளோஸாம். அவர் நிறுவனத்தில் இருந்த நடிகை திடீரென வெளியேறிய பிறகு அவரை குறை சொல்லும் பாணியில் சிலர் தொடங்கிய நெகட்டிவ் விஷயங்கள், பின்னர் மொத்த ஆன்லைன் விமர்சனமாக மாறியது.

இது ஒரு நடுத்தர அளவிலான நடிகைக்கு நடக்கிறது என்றால், மற்றவர்களுக்கு என்ன நடக்கும்? பிரபலமாக இருக்க ஒரு PR டீம் தேவையானது. ஆனால், யாராவது அந்த அமைப்பை விட்டு வெளியேறினால் அவரை தாக்குவது மோசமான செயல் தானே? இப்போது அந்த நடிகைக்கு வாய்ப்பு போய் ஒற்றை பாட்டுக்குள் வந்து இருக்கிறார்.

Next Story