Gossip: விடாமல் ஓவர் முயற்சி படக்குழு கொடுத்த ஸ்கிரிப்ட்… ஓ இதுக்கு தானா அந்த பில்டப்பு?

by Akhilan |   ( Updated:2025-02-01 15:07:06  )
Gossip
X

Gossip: தமிழ் சினிமாவின் தூண்களாக இருக்கும் இரண்டு மாஸ் ஹிட் நடிகர்கள் ரொம்பவும் குழாவி கொண்டதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. அதுக்கு காரணம் படக்குழு கொடுத்த பக்கா ஸ்கிரிப்ட் தானாம்.

கோலிவுட்டில் தனியாக வந்து ஹிட்டடித்த நடிகர் கடைசியாக தன்னுடைய போட்டி நடிகருடன் ஒரு படத்தினை ரிலீஸ் செய்தார். ஆனால் அதை தொடர்ந்து இரண்டு படங்கள் ரெடியாகி விட்டாலும் அடுத்தடுத்த படங்கள் இன்னமும் ரிலீசாகாமல் இருக்கிறது.

இதில் பல வருடமாக ரிலீஸுக்கு காத்திருக்கும் விடாமல் டிரை செஞ்ச படத்தினை ஹீரோவின் ஆசைக்காக எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் கொடுத்த கதையை அவர் ஐடியாவில் இயக்கி கொடுத்தது தான் வேலையாம்.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் கோலிவுட்டில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் எல்லாமே ஓவர் பில்டப்பில் மண்ணை கவ்வியது. அதனால் இந்த படத்துக்கு பெரிய அளவும் ஓவராக சீன் காட்டாமல் அடக்கி வாசிக்கிறதாம் படக்குழு. அப்போதான் படம் தேறும் என்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் உச்ச நடிகர் அரசியல் சென்றதால் அவரின் ரசிகர்களையும் வளைக்க வேண்டும். சமீபகாலமாக இந்த ஹிட் நடிகரின் அப்டேட் அடிக்கடி வருவதால் வேறு கடுப்பில் இருந்து வருகின்றனர். உடனே அவர்களை திட்டம் போட்டு ஸ்கெட்ச் போட படக்குழு ஒரு திட்டமிட்டதாம்.

இதை தொடர்ந்தே அந்த வெற்றிக்கு வாழ்த்து வந்தது. அந்த உச்ச அங்கீகாரத்துக்கும் உச்ச நடிகர் தான் வாழ்த்து சொன்னார் என ஒரு சமாளிப்பை போட்டு அந்த நடிகரின் ரசிகர்களை ஐஸ் வைத்து விட்டனர். அதனால் அடுத்து விடாமல் டிரை செஞ்ச படம் ரிலீஸாகும் போது வசூல் கல்லா கட்டலாம் என்ற திட்டமாம்.

Next Story