Gossip: நாட்டையே காப்பாத்த போறேனு வரும் உச்ச நடிகரிடம் இருந்து மக்களை காப்பாத்தும் நிலை வருமோ?

by Akhilan |
Gossip
X

Gossip: தமிழ்நாட்டை காப்பாத்தவே தன்னுடைய சினிமாவின் உச்சத்தை உதறிவிட்டு வரும் உச்ச நடிகருக்கு பிரச்சனை அவர் கூட இருப்பவர்களால் தான் என்பது மட்டும் அடிக்கடி நிரூபணமாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய கோடியில் சம்பளம் வாங்கி வரும் நடிகர். திடீரென அரசியல் வாழ்க்கைக்குள் குதிக்க தயாராகினார். ஆனால் அந்த அறிவிப்பெல்லாம் முதலில் உண்மையா இல்லையா என்ற சந்தேகமே பலரிடமும் இருந்தது. ஆனால் ஒரு நாள் தடாலடியாக அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனா, நடிகர் அரசியல் அறிவிப்பு வந்த நாளில் இருந்து ஒரே சர்ச்சை தான். முதலில் அரசியல் கட்சியின் பெயர் வந்த போது அதில் பிழை இருக்க அதையே பலரும் விமர்சிக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் விஜயும் கட்சியின் பெயரினை அவர்கள் சொன்னது போலவே மாற்றினார்.

தொடர்ச்சியாக கட்சி கொடி அறிவிப்பில் அப்பா, அம்மாவை மதிக்கல என பல வெடிகள் வெடித்தது. இந்நிலையில் தான் நடிகர் மாநாட்டில் நீட்டி முழங்க அதன் பின்னர் வெளியில் தலைக்காட்டாமலே இருந்து கடுப்பேற்றினார். இதனால் அவருக்கு சப்போர்ட் பண்ணலாமா, வேண்டாமா என பல கேள்விகள் எழுந்தது.

இதையடுத்து அதிரடியாக நடிகர் கட்சியை பிரபலப்படுத்தும் விதமாக சமூக பிரச்னைகள் நடந்த இடத்துக்கு ரவுண்ட் அடிக்க தொடங்கி இருக்கிறார். அங்கு ஒரு பத்து நிமிசம் பேசினாலே எல்லாரும் நம்மை பற்றியே பேசுவார்கள் அதுவே கட்சிக்கு செம பில்டப்பாக இருக்கும் என்ற திட்டமாம்.

இப்படி ஒரு ரவுண்ட் போய் கொண்டு இருக்க சைடில் இந்த கட்சியில் பதவிகளுக்கு பல லட்சம் பணமாக கேட்பதாக புகார்கள் எழுந்து இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஏரியாவின் நகரத் தலைவர் பதிவிக்கு மட்டுமே 15 லட்சம் வரை பேரம் நடந்து இருக்கிறதாம். இது தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கும் நிலையில் உச்ச நடிகரின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வி.

Next Story