Gossip: விவாகரத்து நடிகையை வச்சு செய்யும் நடிகர் குடும்பம்… மொத்தமாக அழிந்த சினிமா வாழ்க்கை!

Gossip: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபல ஜோடியாக இருந்த முக்கிய தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்தனர். இது அவர்கள் குடும்பத்தை விட ரசிகர்களை தான் அதிக அளவில் பாதித்தது. தமிழிலிருந்து அக்கட தேசத்திற்கு போனவர் அந்த நடிகை.
குழந்தைத்தனமாக பேசும் அந்த நடிகையை ரசிகர்களுக்கு அதிக அளவில் பிடிக்கும். ஆனால் அவருடைய கணவர் வாரிசு நடிகர் என்பதால் அவர் மீது பலருக்கு பெரிய அளவில் அபிப்பிராயம் இல்லை. அதுமட்டுமல்லாமல் அவர் தற்போது இரண்டாம் திருமணம் செய்திருக்கிறார்.
தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் முதல் திருமணத்தின்போதே சுற்றி வந்ததாகவும் தகவல்கள் கிசுகிசுத்தது. தன்னை கணவர் ஏமாற்றிவிட்டார் என கூறிதான் அந்த நடிகை விவாகரத்துக்கே சென்றிருக்கிறார். இருவரும் பிரிந்து சில ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தன்னுடைய அந்த காதலியை மணந்து கொண்டிருக்கிறார் வாரிசு நடிகர்.
விவாகரத்துக்கு பின்னர் கூட வாய் திறக்காத நடிகை அவர்கள் திருமணம் முடிந்த சில காலமாக தன்னுடைய முதல் திருமணத்தில் நடந்த ஏமாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார். இதில் வாரிசு நடிகரின் சூப்பர் ஸ்டார் அப்பாவிற்கு மிகப்பெரிய அளவில் வருத்தம் ஏற்பட்டு இருக்கிறதாம்.
ஏற்கனவே தன்னுடைய குடும்பம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதனால் நடிகையும் இப்படி செய்தால் மேலும் தங்களுக்கு பிரச்சனை வரும் எனக் கருதி அவரை தன்னுடைய அக்கட தேச படங்களில் இனி நடிக்க விடக்கூடாது என முடிவெடுத்து இருக்கிறாராம்.
இதனாலே, விவாகரத்து நடிகைக்கு தற்போது மிகப்பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் சும்மா இருந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரை எந்த அக்கட தேச தயாரிப்பாளர்களும் நெருங்கக் கூடாது எனவும் வாய்மொழி உத்தரவு போட்டு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.