Gossip: வாழ்க்கை கொடுத்த இசை கடவுளை ஏமாற்றிய காவிய இயக்குனர்… பாவம் பாஸே…
Gossip: தமிழ் சினிமா உலகில் இசை என்றால் உடனே வரும் இரண்டு பெயர்கள். இதில் இசை கடவுள் வளர்த்து விட்ட ஒரு இயக்குனரால் தான் இன்னொரு ஆஸ்கார் பிரபலம் உள்ளே வந்திருக்கிறார். ஆனால் அதன் பின்னால் மோசமான பின்னணி ஒன்று இருக்கிறதாம்.
இதையும் படிங்க: டி.ஆர் டியூனை காப்பி அடித்த லோகேஷ்!.. எப்படி இருக்கு கூலி பட வீடியோ?!...
நாற்பது நாட்களா இசை கடவுள் ரெக்கார்டிங் தியேட்டர் வாசல்லயே நின்னு இருக்காரு காவிய இயக்குனர். இதை ஒரு நாள் பார்த்த இசை கடவுள், என்ன ஏதுனு கூப்பிட்டு கேட்டிருக்காரு. அதுக்கு அந்த காவிய இயக்குனர், உங்க கிட்ட கதை சொல்லணும்னு சொல்லியிருக்கு.
தன்னுடைய ரெக்கார்டிங் கேப்பில் காவிய இயக்குநரை அழைத்து கதை கேட்டிருக்காரு இசை கடவுள். உடனே அவருக்கு கடைபிடித்து விட கன்னடத்தில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார். படமும் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்று இருக்கிறது.
ஆனால் மீண்டும் அந்த காவிய இயக்குனர் இசைக்கடவுள் பின்னாலே சுற்றி இருக்கிறார். ரெக்கார்டிங் தியேட்டருக்கு தயாரிப்பாளர் ஒருவர் வர அவரிடம் இசை கடவுள் காவிய இயக்குனர் குறித்து பெருமையாக பேசி தமிழில் இயக்க ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் தயாரிப்பாளராக வந்த அந்த பிரபலம் காவிய இயக்குனரின் சகோதரரும். இசை கடவுளுக்கு இருவரும் அண்ணன் தம்பிகள் என தெரியாமலேயே அவருக்கு நல்லது செய்வதாக இதை செய்திருக்கிறார்.
ஆனால் படம் இயக்கி காவிய இயக்குனர் தமிழில் சூப்பர் ஹிட் அடிக்க தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அப்படி ஒரு இடத்தை பிடித்த உடன் செய்த முதல் வேலை இசை கடவுளுக்கு போட்டியாக இசை பிரபலத்தை கொண்டு வந்தது தான்.
பொதுவாக இசை கடவுள் மீது தமிழ் உலகத்தில் மிகப்பெரிய சர்ச்சைகள் எப்போதுமே நிலவி வரும். ஆனால் அவர் தன்னுடைய இசையில் கர்வமாக இருந்தாலும் தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் தன்னாலான உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறாராம்.