கடவுள் பெயரில் கலக்கல் கதாநாயகர்களின் படங்கள்

by sankaran v |   ( Updated:2022-08-11 18:54:44  )
கடவுள் பெயரில் கலக்கல் கதாநாயகர்களின் படங்கள்
X

Aanjaneya Ajith

தமிழ்சினிமாவில் கடவுள் பெயரில் பல படங்கள் வந்துள்ளன. இருந்தாலும் அவை நம்ம கலக்கலான ஹீரோக்கள் நடித்த படங்கள் என்றால் அதில் சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட சில படங்களை இப்போது பார்ப்போம்.

அண்ணாமலை

1992ல் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினியின் மாபெரும் வெற்றிச்சித்திரம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். குஷ்பூ, சரத்பாபு, மனோரமா, ஜனகராஜ், நிழல்கள் ரவி, வினுசக்கரவர்த்தி, ரேகா, கரன் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். படத்தின் பஞ்ச் டயலாக்குகள் ஒவ்வொன்றும் அனல் பறக்கும்.

Annamalai Rajni

வந்தேன்டா பால்காரன், அண்ணாமலை அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ, வெற்றி நிச்சயம், ஒரு பெண் புறா, ரெக்கைக் கட்டி பறக்குது ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.

பைரவா

2017ல் பரதன் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம். தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இது ஒரு அதிரடி படம். விஜய்க்கு இது 60வது படம். அழகிய சூடான பூவே, நில்லாயோ, பாப்பா பாப்பா, பட்டய கிளப்பு, வரலாம் வரலாம் வா ஆகிய பாடல்கள் உள்ளன.

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா

TEV

1999ல் வெளியான நகைச்சுவை படம். ராமநாராயணன் இயக்கியுள்ளார். பிரபு, எஸ்.வி.சேகர், வடிவேலு, ரோஜா, ஊர்வசி, கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். இது இயக்குனர் ராமநாராயணனுக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் சுமார். ஆசை ஆசை, காதலுக்கு தூது சொல்லு, நிலவோட தங்கச்சி, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஆகிய பாடல்கள் உள்ளன.

ஆஞ்சநேயா

2003ல் என்.மகாராஜன் இயக்கிய படம். அஜீத்குமார், மீராஜாஸ்மின், ரகுவரன், ஜெயப்பிரகாச ரெட்டி, ரமேஷ் கண்ணா, ஆதித்யா, கோவை சரளா, வினுசக்கரவர்த்தி, பொன்னம்பலம் உள்பட பலர் நடித்துள்ளனர். மணி சர்மா இசை அமைத்துள்ளார்.

பரமசிவன்

paramasivan

2006ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம். அஜித், லைலா, நாசர், பிரகாஷ்ராஜ், விவேக், ஜெயராம், ஐஸ்வர்யா, மயில்சாமி, சந்தானபாரதி, கோட்டா சீனிவாச ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

ஒரு கிளி, ஆசை தோசை, கண்ணன், நட்சத்திர பறவைக்கு, தங்கக்கிளி ஒண்ணு, உண்டிவில், வந்தே மாதரம் ஆகிய பாடல்கள் உள்ளன.

Next Story