மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கோலிவுட் ஹீரோக்கள்!. வாய்ப்பு கொடுப்பாங்களா?!..
தற்போது நல்ல சினிமா விரும்பிகள் சிலாகித்து பேசும் படமாக மஞ்சுபெல் பாய்ஸ் படம் மாறியிருக்கிறது. சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் இது. திடீரென ஒரு மலையாள சினிமா எல்லோராலும் சிலாகித்து பேசப்படும். தமிழ் சினிமா ரசிகர்களும் அப்படத்தை விரும்பி பார்ப்பார்கள்.
தமிழ் சினிமாக்களை விமர்சனம் செய்யும் யுடியூப் விமர்சகர்களும் இந்த படத்தை பற்றி ரிவ்யூ கொடுப்பார்கள். மேலும் பலரும் அந்த படம் பற்றி சமூகவலைத்தளங்களில் ரைட்டப் எழுதுவார்கள். இப்போது இது மஞ்சுமெல் பாய்ஸ்க்கு அமைந்திருக்கிறது. 1991ம் வருடம் கமலின் நடிப்பில் வெளிவந்த குணா படத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இப்படம் அமைந்திருக்கிறது. இப்படத்தை சிதம்பரம் பொடுவேல் என்பவர் இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: கார்த்தியை 300 கிலோமீட்டர் ஓடவிட்ட ஸ்டண்ட் மாஸ்டர்… எந்தப்படத்திற்கு என்று தெரியுமா?
அதாவது குணா படத்தின் சில முக்கிய காட்சிகளை கொடைக்கானலில் இருந்த Devi's kitchen என்கிற குகையில் எடுத்தார்கள். ஆனால், குணா படம் வெளியான பின் அந்த இடத்திற்கு குணா குகை என பெயர் வந்துவிட்டது. அதோடு, பலரும் அந்த இடத்திற்கு சென்று பார்க்க விரும்பினார். அப்படி போனதில் 2 பேர் மேலே இருந்து கீழே விழுந்துவிட்டனர்.
அதில் ஒருவரை மட்டுமே உயிரோடு மீட்க முடிந்தது. எனவே, அந்த குகையின் உள்ளே யாரும் செல்ல முடியாத படி தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்த இடத்தை அடிப்படையாக வைத்துதான் மஞ்சுமெல் பாய்ஸ் படம் உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. 20 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
இதையும் படிங்க: கேரளாவில் விஜய் படம் ரிலீஸானால்…? மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சொன்ன ஆச்சரிய தகவல்
இதைத்தொடர்ந்து இப்படத்தில் கமலும் பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அதேபோல், படத்தின் இயக்குனர் சிதம்பரத்தை நடிகர் தனுஷ் நேரில் அழைத்து பாராட்டி பேசியிருக்கிறார். அதேபோல், சியான் விக்ரமும் சிதம்பரத்தை அழைத்து பாராட்டியிருக்கிறார்.
அதோடு, பல தமிழ் யுடியுப் சேனல்களுக்கும் சிதம்பரம் பேட்டி கொடுத்து வருகிறார். சிதம்பரத்தை அழைத்து பேசும் கோலிவுட் ஹீரோக்கள் அவரின் இயக்கத்தில் நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: மஞ்சுமல் பாய்ஸ் இருக்கட்டும்… குணாவே காப்பிதான்!.. கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.