Connect with us

Cinema History

விபசாரப்பெண்களை சித்தரிக்கும் கதை அம்சம் கொண்ட படங்கள் – ஒரு பார்வை

உடலை விற்று பிழைப்பு நடத்துபவர்கள் விபசாரப் பெண்கள். இவர்கள் அந்தத் தொழிலுக்கு ஏதோ ஒரு நெருக்கடி காரணமாகத் தான் வந்து இருப்பார்கள். முக்கியமாகப் பொருளாதார நெருக்கடியாகவே இருக்கும். அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றியும் முழுமையாக எந்த ஒரு படமும் சித்தரிக்காது. ஆனால் போகிற போக்கில் பட்டும் படாமலும் சொல்லி விட்டுப் போகும்.

70காலகட்டங்களில் தான் சினிமாவில் விபசார விடுதியே காட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை பார்த்தால் பணக்காரர்களை மயக்கி பணம் பறிக்கும் தாசிகளைத் தான் நாம் திரையில் காணலாம். இவர்களது வேலை என்றால் நடனமாடி மயக்குவதுதான். நளினமாக ஆடும் நடனத்திலேயே ஆண்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காமப் போதையை ஊட்டி விடுவர். இதுபோன்ற படங்களை இப்போது பார்க்கலாம்.

ரத்தக்கண்ணீர்

Rathakkanneer

1956ல் வெளியான சூப்பர்ஹிட் படம். படத்தின் நாயகன் மோகன் கட்டிய மனைவியை விட்டு விட்டு நடனமங்கையையும் தன் உள்ளம் கவர்ந்த காந்தாளின் அழகில் மயங்கி தன் சொத்துகளை இழந்து தொழுநோய் வந்து அனாதையாகத் திரிகிறான்.

கடைசியில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். பிற பெண்களை நாடக்கூடாது. பணத்தை இழந்து அற்ப சுகத்துக்காக வாழ்க்கையை இழந்து விடக்கூடாது என்ற ஆழமான கருத்தைப் படம் அழகாக விளக்கியுள்ளது.

பராசக்தி

1951ல் வெளியானது. வெளிநாட்டில் இருந்து பெரும் பணத்தோடு வருகிறான் நாயகன் குணசேகரன். தன் தங்கை கல்யாணியைத் தேடி அலைகிறான். ஆனால் தாசி வீடு ஒன்றில் வசமாக மாட்டிக்கொள்கிறான்.

அவனுக்குப் போதை ஊட்டப்படுகிறது. நடனத்தை ரசிக்கும் அவன் சுயநினைவை இழந்து தனது பணம் பொருள் அனைத்தையும் பறிகொடுத்து நடுத்தெருவிற்கு வந்து விடுகிறான். தன்னைப் பைத்தியமாகக் காட்டி பிச்சை எடுத்து சாப்பிடுகிறான்.

தேவதாஸ்

தன் காதலி தனக்கு மனைவியாக அமையவில்லையே என்று மனம் உடைகிறான். அவளோ இன்னொரு வயதானவனுக்குப் போய் மனைவியாக அமைந்து விடுகிறாள்.

இதனால் மனம் விரக்தியடைந்து இன்ப சுகத்தைத் தேடி அலைகிறான். அதனால் அவன் விபசார விடுதியே கதி என்று கிடக்கிறான்.

மனோகரா

Manogara

அரசனையே நடனமங்கை போல வந்து மயக்குகிறாள் ஒரு அழகு மங்கை வசந்த சேனா. அவள் பேச்சில் அரசரின் மனைவியும், மகன் மனோகரனும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். தாசியோ ஆட்சிக்கட்டிலில் அமர்கிறாள்.

கடைசியில் அரசனின் உயிருக்கே உலை வைக்கிறாள். அந்த நேரம் தன் தாயின் கட்டளைக்கு இணங்க பொங்கி எழுகிறான் மனோகரன். வஞ்சகப் பெண்ணையும், அவளது கூட்டத்தையும் அழிக்கிறான்.

அரங்கேற்றம்

Aranketram

1973ல் படித்த நாயகி தன் குடும்பத்திற்காக உடலை விற்று பிழைக்கிறாள். இப்படி ஒரு அவலம் ஏற்பட என்ன காரணம் என படம் விளக்குகிறது. படத்தை இயக்கியவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர்.

குணா

1991ல் சின்ன வயதிலிருந்தே விபசார விடுதி பகுதியில் வளர்பவன் நாயகன் குணா. அதைப் பார்த்து அவனுக்கே தன் மீதும் அவனது பெற்றோர் மீதும் ஆத்திரம் வரும். உலகில் உள்ள அனைவருமே அசிங்கம் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறான்.

அதன் பின்னர் ஒரு தேவதையைத் தான் மனைவியாக அடைய வேண்டும் என நினைத்து அந்த அபிராமியைத் தேடி அலைகிறான். அவன் மனதில் வந்த அபிராமியையும் பார்க்கிறான்.

அவளைக் கடத்துகிறான். குகையில் கொண்டு போய் பத்திரமாக வைத்து பௌர்ணமியில் அவளுக்குத் தாலியும் கட்டி மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். நாயகியின் பெற்றோரும் போலீசும் துரத்துகின்றனர். இருவரும் என்ன ஆனார்கள் என்பதே படத்தின் கதை.

மூன்றாம் பிறை

Moondram pirai

1982ல் பாலுமகேந்திராவின் படைப்பில் வெளியானது மூன்றாம்பிறை. விபசார விடுதிக்கு வரும் நாயகன், மனநலம் குன்றிய நாயகியைக் காப்பாற்றி அழைத்து தன்னோடு வைத்துக் கொண்டு வளர்க்கிறான்.

இறுதியில் அவளைக் குணப்படுத்துகிறான். ஆனால் பழைய நினைவுகளை மறந்து போகிறாள். நாயகன் இப்போது அவளுக்குத் தான் யார் என்பதை புரிய வைக்க முடியாமல் பரிதவிக்கிறான்.

நாயகன்

1987ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது. விபசார விடுதியில் சந்தித்த பெண்ணின் மீது அக்கறையும், காதலும் கொள்கிறான் நாயகன். அவளையே திருமணம் செய்து கொண்டு நல்வாழ்வு அளிக்கிறான்.

google news
Continue Reading

More in Cinema History

To Top