More
Categories: Cinema History Cinema News latest news

ஒரே பாடலில் மூன்று வித ரசனை.. இன்றைய தலைமுறையும் கேட்க வேண்டிய அந்த காலப் பாடல்..!

திரைக்கவித்திலகம் மருதகாசிக்கு இன்று 104 வது பிறந்தநாள். தமிழ்சினிமாவிற்கு பாதை போட்டுக் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கவிஞர் மருதகாசி. தமிழ்ப்பட பாடல்களை அதில் வரும் சொற்களை எளிமையாக்கியவர் உடுமலை நாராயணகவி. அந்தப் பாடலில் எல்லோருக்கும் எளிமையாக்கி இலக்கிய ரசனையையும் கலந்து பாடல்களை முதன் முதலில் கொடுத்தவர் மருதகாசி.

இன்றைய தலைமுறை கேட்டு ரசிக்க வேண்டிய பாடல் இது. 1958ல் வெளிவந்த சாரங்கதாரா படம். இந்தப்படத்துல நடிகர்திலகம் சிவாஜி, பானுமதி, நம்பியார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தோட இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் இந்தப்படத்தில் வரும் வசந்த முல்லை போலே வந்து என்ற பாடல் ஒரு எவர்கிரீன் சாங். அதே படத்தில் தான் மேகத்திரை பிளந்து மின்னலைப் போல் என்ற பாடலையும் மருதகாசி எழுதினார்.

Advertising
Advertising

இந்தப் பாடலில் இளவரசர், தளபதி, நகைச்சுவை கலைஞர் என 3 பேர் பந்தயப்புறாக்களை விடுகின்றனர். இவர்கள் வானத்தில் தங்களது புறாக்கள் பறப்பதை ரசிக்கின்றனர். அதைப் பற்றி இந்த 3 பேரும் பாடுவது மாதிரியான பாடல் தான் இது. அதாவது முதலாவதாக இளவரசர் மேகத்திரை பிளந்து மின்னலைப் போல் நுழைந்து… வில்லினின்றே எழுந்த அம்பு போல நுழைந்து போகுது பார் என் புறா என்று உவமையுடன் எழுதியிருப்பார் கவிஞர்.

இதையும் படிங்க… எம்.எஸ்.வி பாடலை பாட முடியாமல் அழுத பெண்.. பின்னளில் பிரபல பின்னணி பாடகி.. அட அவரா?!..

தளபதி இப்படி சொல்வார். சூரிய மண்டத்தை நேரில் பார்த்து வர தாவுது பார் என் நீலப்புறா என தளபதி பாடுவதாக ரசனை குறையாமல் எழுதியுள்ளார் கவிஞர். அதுவும் அந்த 50களிலேயே அவரது அறிவியல் அறிவு சூரிய மண்டலம் என்று எழுதியதன் மூலம் தென்படுகிறது.

அதுமட்டும் அல்லாமல் ஒரு கட்சி தொண்டன் அதை வளர்க்க செய்யும் முயற்சியை புறா பறப்பதற்கு உவமையாகச் சொல்லியிருப்பார் கவிஞர். அதாவது, மாநிலத்தில் தனது கொள்கை மேலே குறி வைத்து போக்கில் செல்லும் தொண்டர் போலே, உண்மைத் தொண்டர் போலே என்று எழுதியிருப்பார் கவிஞர். அடுத்ததாக நகைச்சுவை கலைஞர் பாடுவது போல் பாடியது அருமை.

எகிறி எகிறி தாவுது எழும்பி மேலே போகுது. அங்கும் இங்கும் சுற்றிச் சுற்றி ஆட்டம் எல்லாம் போடுது. தங்கப்புறா என் புறா. தளுங்குகார பெண் புறா. ஜாலவித்தைக் காட்டுது. இப்படி எளிமையான சொற்களைப் போட்டு எழுதியிருப்பார் கவிஞர் மருதகாசி.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts