Home Cine News টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

மலையாளத்தில் 5 தான்.. தமிழில் 500க்கு மேல் இருக்கும்.. உடைத்து பேசிய தமிழ் நடிகை

Published on: September 3, 2024
---Advertisement---

Malayalam: ஹேமா கமிட்டியின் அறிக்கையால் நடிகர்கள் பலரின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறி இருக்கும் நிலையில், மலையாள கதையை விட்டு தமிழில் இதைவிட கொடுமைகள் நடந்திருப்பதாக நடிகை ரேகா நாயர் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறும்போது, முதலில் எந்த விஷயம் இந்தி சினிமாவில் தான் தொடங்கியது. அதை அடுத்து தமிழில் மீ டு அமைப்பு மூலம் இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியானது. சினிமாக்களில் இது போன்ற விஷயம் தொடர்ந்து நடந்து  கொண்டிருக்கிறது. 

இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!

இந்த விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இன்னும் சினிமாவில் இருப்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். இது எல்லாம் தன்னால் சமாளிக்க முடியாது என கூறி சினிமாவை விட்டு ஓடியவர்களும் இருக்கிறார்கள்.

அதிலும் சிலர் தாங்க முடியாமல் பொங்கி வரும் போது தான் இது செய்தியாக வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இதே போன்ற விஷயங்களுக்கு குரல் கொடுத்தால் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காது. இதனால்தான் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் இது குறித்து பேசுவதே இல்லை.

என்னை போன்ற சமூகத்திற்காக பேசும் நடிகைகள் தான் இது குறித்து இன்னமும் பேசி வருகின்றனர். மலையாளத்தில் ஐந்து 10 கதையை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தமிழில் 500க்கும் 1000க்கும் மேல் கூட நடிகைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பொய் சொல்லலாம்.. ஆனா இப்படியா… குக் வித் கோமாளி பிரபலத்தினை கடுப்படித்த சிலம்பரசன்

தமிழில் துணை நடிகைகள் முதல் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் முதற்கொண்டு இதில் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் யார் இதை முதலில் பேசுவது என்ற பயத்திலேயே இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. விஷால் இது போன்ற புகார்கள் குறைந்து வருவதாக கூறியிருக்கிறார்.

rekha nair

ஆனால் அவரிடம் எத்தனை புகார்கள் சென்றது. அவற்றில் எதையெல்லாம் அவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அவரால் தன்னிச்சையாக தவறு செய்தவர்களை தண்டிக்க முடியுமா  என்பது தான் இங்கு கேள்விக்குறியே. புகார் கொடுக்கப் போனால் அங்கு யாருமே கிடையாது. ஒரே ஒரு புகார் ஆவது அவர் நடவடிக்கை எடுத்திருந்தால் நான் ஒப்புக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.