
latest news
Gossip: இருக்கதே ஒன்னே ஒன்னு! அங்கையும் மூஞ்ச காட்டலாமா? நம்பர் நடிகையால் கடுப்பில் பூ நடிகை!.
Gossip: கோலிவுட்டில் டாப் லெவலில் இருந்து வந்த நம்பர் நடிகை தற்போது தன்னுடைய கேரியரின் பாதாளத்தில் இருக்கிறார். தற்போது வரை காப்பாற்ற இருக்கும் ஒரே திரைப்படமாக அந்த அம்மன் படம் தான் இருக்கும் என நம்பப்படுகிறது.
உச்சியில் இருந்த போது கூட இவ்வளவு அட்டூழியம் அவர் செய்ததில்லை. ஆனால் தற்போது தயாரிப்பாளரை விழி பிதுங்க வைக்கும் நிலைக்கு வந்துள்ளார். இதற்கு ஒரு பக்கம் அவர் கணவர் காரணம் என்றாலும் அம்மணிக்கு எல்லா படமும் பிரச்னையில் முடிகிறது.
இதனால் தொழில் தொடங்கி அதுவும் ஒரு பக்கம் நஷ்டத்தில் முடிய அம்மன் படத்தினை இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற ஐடியாவை கொடுத்ததே இவர்தானாம். அதை தொடர்ந்து திரில்லர் ஜானரில் ஹிட்டடித்த இயக்குனரை உள்ளே அழைத்து வந்தனர்.
Also Read: இந்த ரெண்டு படங்களோட கலவைதான் வீர தீர சூரன்!. பொசுக்குன்னு சொல்லிட்டாரே விக்ரம்!…
நான்தான் படத்தில் ஹீரோயின் என்பதால் நமக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் நம்பர் நடிகை பூஜைக்கு படு ஸ்பெஷலாக கிளம்பி சென்று இருக்கிறார். ஆனால் அந்த சென்று பார்த்தால் எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க கடுப்பாகி விட்டாராம்.
அது மட்டுமல்லாமல் இயக்குனர் மனைவி என்பதால் பூ நடிகையும், அவர் தோழிக்கும் ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்க அம்மணி ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறார். இதனால் தற்போது படப்பிடிப்பில் தனக்கு தனி கேரவன் வேண்டும் என அடம்பிடிக்க தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கிறது.
ஏற்கனவே எல்லா படங்களும் பிரச்சினைகளும் முடிந்து இருக்கும் நிலையில் இருக்கும் ஒன்னே ஒன்னில் கூட இப்படி பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இப்படியே சென்றால் இவர் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப வேண்டிய நிலை விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.