நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன்!...அடம்புடிச்சி பாழாப்போன நடிகர்களின் லிஸ்ட் இதோ!....

by Rohini |
hero_main_cine
X

தமிழ் சினிமாவில் 70, 80களில் ஆட்டம் போட்ட நடிகர்கள் ஏராளம். அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது இன்றளவும். மேலும் அந்த கால நடிகர்களில் சில முன்னனி நடிகர்கள் வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்பதற்காக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்னர்.

hero1_cine

அதற்கு உதாரணமாக பிரபு, சத்யராஜ், சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் 80களில் டாப்பில் இருந்தவர்கள். அதில் விதிவிலக்காக இன்னும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருப்பவர்கள் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல். ஆனால் நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று வந்த வாய்ப்பையும் தவறவிட்டு நடுத்தெருவில் நிற்கும் நடிகர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா? இதோ அவர்களின் லிஸ்ட்.

hero2_cine

நடிகர் கரண்: கிட்டத்தட்ட குழந்தை நட்சத்திரமாக 70 படங்களில் நடித்த கரண் ஒரு நடிகராக அண்ணாமலை என்ற படத்தின் மூலம் நுழைந்தார். நடித்த படங்களால் நல்ல வரவேற்பை பெற்ற இவர் ஒரு காலகட்டத்தில் வாய்ப்புகள் ஏதும் வராமல் இருந்த கரண் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்த படங்கள் சரிவர போகவில்லை.

hero3_cine

நடிகர் ராமராஜன்: ரஜினி, கமலுக்கு டஃப் கொடுத்த மிகச்சிறந்த நடிகர்களில் ராமராஜன் முக்கியமானவர். கரகாட்டக்காரன் படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அரசியலில் கவனம் செலுத்திய இவர் வாய்ப்புகளை பயன்படுத்த தவறிவிட்டார். ஆனாலும் இப்ப உள்ள இயக்குனர்கள் இவரை தேட நடிச்சா ஹீரோ தான்ப்பா என்று சொல்லிவிடுகிறாராம்.

hero7_cine

நடிகர் பிரசாந்த்: ஒரு சாக்லேட் பாயாகவே வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்கு இருந்த பெண் ரசிகைகள் இப்போதுள்ள எந்த ஹீரோக்களுக்கும் கிடையாது. விஜய், அஜித் நடிக்க வந்த போதே அவர்களுக்கெல்லாம் முன்னனி நடிகராக வலம் வந்தார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் இன்று அந்த இடத்தை தவறவிட்டார்.இருந்தாலும் வந்தால் ஹீரோவாகத்தான் வருவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பிரசாந்த்.

hero4_cine

நடிகர் அப்பாஸ்: இவரும் கிட்டத்தட்ட பெண்களுக்கு பிடிச்ச ஹீரோவாகத்தான் வலம் வந்தார். நல்ல உடலமைப்பு, சிவந்த நிறம் என்று பார்ப்பவர்களை வசியப்படுத்துகிற தோற்றம் என இருந்த அப்பாஸ் காலப்போக்கில் காணாமல் போய்விட்டார்.

hero5_cine

இப்படி நடிகர் ஷியாம், மோகன், பரத் என பல நடிகர்கள் கிடைத்த வாய்ப்புகளை கோட்டைவிட்டு என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகின்றனர்.

Next Story