Categories: Cinema History latest news

ட்ரைலரில் எதிர்பார்ப்பை எகிற வைத்து ரசிகர்களை கதற வைத்த திரைப்படங்கள்.! லிஸ்ட்ல சிக்காத ஹீரோவே இல்ல…

தமிழ் சினிமாவில் தற்போதுவெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்ட உதவும் எளிய கருவி என்றால் அது படத்தின் டீசர், டிரைலர், போஸ்டர், பாடல்கள் என இவை அனைத்தும் தான். இதில் டிரைலர் மற்றும் டீசர் ஆகியவை மிகவும் முக்கிய பங்காற்றி வருகின்றன.

ஒரு படத்தின் டீசர் அல்லது டிரைலர் ரசிகர்களின் படத்தின்மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விடும். அதே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் நினைத்ததை விட மிகப்பெரிய வெற்றியடையும். அதற்கு இந்த ட்ரெய்லர் டீஸர் உதவுகிறது.

Also Read

ஆனால், அதே நேரத்தில் படத்தின் டிரைலர், டீசர் நன்றாக  வரவேற்ப்பை பெற்று, அதனை படம் சரியாக பூர்த்தி செய்யவில்லை என்றால் படம் நல்ல படமாக இருந்தாலும் தோல்வியடைந்து விடும். அப்படி நம்ம தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு சில படங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

இதில் முதலிடத்தில் நம்ம சூர்யா தான். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் திரைப்படம் உண்மையில் நல்ல திரைபடடம் தான். படத்தின் கதை ரெம்ப மொக்கை எல்லாம் இல்லை. ஆனால், படத்தின் டீசர் வெளியாகி இப்படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைத்து விட்டது. மேலும், பட இயக்குனர் இப்படத்தை பற்றி ஆகோ ஓகே, கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கிருக்கேன் என கூற தியேட்டர் போன ரசிகர்களுக்கு அது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது. படத்தின் ரிசல்ட் தோல்வி.

அடுத்து அஜித்தின் விவேகம். சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தின் காட்சிகள், சண்டை காட்சிகள் என அனைத்தும் நன்றாக இருக்கும். ஆனால், படத்தில் அனைவரும் பேசிக்கொண்டே இருந்த காரணத்தாலும், ஹீரோ பேசினால் பஞ்ச் வசனம் மட்டுமே பேசுவேன் என இருந்ததாலும், படம் தோல்வி படமாக மாறியது.

இந்த லிஸ்டில் தளபதியின் புலி திரைப்படமும் உள்ளது. ஆம். விஜயின் புதிய முயற்சி பாராட்டகூடியது. ஆனால், இந்த ரிசல்ட்டை பார்த்த விஜய் இனி புதிய முயற்சி செய்ய கூடாது என நினைத்தது தான் இப்படத்தின் கதை சுருக்கமே. படம் குழைந்தைகளுக்கான திரைப்படம் இளைஞர்கள் வரவேண்டாம் என கூறியிருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். குழைந்தைகளுக்கு தற்போதும் பேவரைட் இந்த புலி.

இதையும் படியுங்களேன் – தொடை நடுவே ரத்தம்.! இப்படி ஒரு விடியோவை நீங்க பாத்திருக்கவே மாட்டீங்க.! மெட்ராஸ் நடிகரின் புதிய அவதாரம்.!

சூப்பர் ஸ்டாரும் இந்த லிஸ்டில் இருக்கிறார். கபாலி.பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தின் டீசர் ரஜினி ரசிகர்களை விட தமிழ் சினிமா ரசிகர்களையே மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. மீண்டும் பழைய ஸ்டைலான ரஜினியை பார்க்கப்போகிறோம் என நினைத்த ரசிகர்களுக்கு டீசர் காட்சிகள் அனைத்தும் படத்தின் முதல் அரைமணிநேரத்தில் முடிந்துவிட்டதால் கதறிவிட்டனர்.

அடுத்து தனுஷ். பரத்பாலா இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் மரியான். படத்தின் கதை, இசை, காட்சிகள், இசை என அனைத்தும் நன்றாக இருந்தாலும் எதோ ஒன்று இல்லை என ரசிகர்கள் யோசித்துக்கொண்டே சென்றதால் படம் தோல்வியை தழுவியது.

இதில், இவரை விட்டுவிட்டால், மற்ற ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள். ஆம் நம்ம சிம்பு தான். அவர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் யுவனின் தெறிக்கும் இசையில் வெளியாகி சிம்புவோடு சேர்த்து மொத்த படக்குழுவையும் அதள பாதாளத்திற்கு அழைத்து சென்ற படம் அல்ல பாடம் AAA. படத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்தில் மீதி கதையை சொல்கிறேன் என்றவுடன் தியேட்டரில் இருந்து தெறித்து ஓடிவந்துவிட்டனர்.

Published by
Manikandan