80, 90 களில் தமிழ்சினிமாவை அனல் பறக்க வைத்த ஆக்ஷன் ஹீரோக்கள்

by sankaran v |
80, 90 களில் தமிழ்சினிமாவை அனல் பறக்க வைத்த ஆக்ஷன் ஹீரோக்கள்
X

Action king Arjun

80, 90 காலக்கட்டங்களில் படம் பார்க்க தியேட்டருக்குப் போக வேண்டும் என்றால் படத்தைப் பார்த்து விட்டு வந்தவர்களிடம் முதலில் படம் எப்படி இருக்கிறது என்று கேட்போம்.

அடுத்து நாம் கேட்பது எத்தனை பைட்டு, எத்தனை பாட்டு என்பது தான். அவற்றில் நாம் பைட் நிறைய இருந்தால் கட்டாயமாகப் பார்க்கப் போய்விடுவோம். ஆக்ஷன் இருந்தால் தானே படம் சுவாரஸ்யமாக இருக்கும்.

அதனால் தான் அந்தக்கால வால் போஸ்டர்களில் கூட பாட்டு, பைட்டு சூப்பர் என்று அடியில் ஒருவரியில் போட்டு ரசிகர்களைக் கவர்வார்கள். இனி அந்த மாதிரியான ஆக்ஷன் படங்களை நமக்கு ரசனை குறையாமல் அள்ளித் தந்த ஹீரோக்களைப் பற்றியும், அவர்களது படங்களைப் பற்றியும் பார்ப்போம்.

சரத்குமார்

suriyan sarathkumar

1988ல் கண்சிமிட்டும் நேரம் படத்தில் அறிமுகம். 1990ல் புலன் விசாரணை வில்லன் மௌனம் சம்மதம், புதுமனிதன், புரியாத புதிர் படங்களில் எல்லாம் வில்லன். முதன் முதலா பாசிட்டிவ் ரோல் பண்ணிய படம் தான் சேரன் பாண்டியன். சூரியன், ஆதித்யன், எல்லைச்சாமி, வேடன், ஐ லவ் இந்தியா, அரண்மனைக்காவலன், மகாபிரபுன்னு ஆக்ஷன் படங்களாகக் கொடுத்தார்.

ரகசிய போலீஸ், நாட்டாமை இவரது நடிப்பில் வெளியான மாஸ் ஆக்ஷன் படங்கள். 2000த்திலும் கூட ஏய், அரசு, கம்பீரம் ஆகிய படங்களைக் கொடுத்தார். பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பள்ளு வேட்டவராயர் என்ற ரோலைப் பண்ணுகிறார்.

அர்ஜூன்

முறுக்கேறிய உடல், கூரிய பார்வை என கனகச்சிதமாக தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன்.

யார், சங்கர் குரு, சேவகன், போலீஸ் லாக்கப், பிரதாப், ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், ஆயுதபூஜை, முதல்வன், ஏழுமலை, ஆணை, சின்னா, மருதமலை ஆகியவை இவர் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படங்கள். மங்காத்தா, மாசி, ஜெய்ஹிந்த் 2 ஆகிய படங்களையும் கொடுத்தார்.

இன்று வரை உடலைக் கட்டுக்கோப்பாக பயிற்சி செய்து வைத்துள்ளார். அதனால் தான் இவரை தமிழ்சினிமாவில் ஆக்ஷன் கிங் என்கின்றனர். விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் இவர் தான் மாஸான வில்லன்.

விஜயகாந்த்

vijayakanth

1980ல் நீரோட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவரது முதல் ஆக்ஷன் படம் சட்டம் ஒரு இருட்டறை. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ளார். நெஞ்சில் துணிவிருந்தால், நீதி பிழைத்தது, வெற்றி, நூறாவது நாள், ஈட்டி, ஊழை விழிகள், பரதன் என பல ஆக்ஷன் படங்களைத் தந்தார். நல்லவன், புலன்விசாரணை, சத்ரியன், கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், சின்னக்கவுண்டர், சேதுபதி ஐபிஎஸ், ஆனஸ்ட்ராஜ், அலெக்சாண்டர், உளவுத்துறை, வாஞ்சிநாதன், தேவன், ரமணா, கஜேந்திரா என இவரது அனல் பறக்கும் ஆக்ஷன் படங்கள் வந்து குவிந்தன.

சத்யராஜ்

sathyaraj

1978ல் சட்டம் என் கையில் படத்தில் வில்லனாக அறிமுகமானார். காக்கிசட்டை, ஜப்பானில் கல்யாணராமன் ஆகிய படங்களிலும் வில்லன் தான். கடலோரக்கவிதைகள் படத்தில் தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார். பாலைவன ரோஜாக்கள் படத்தில் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.

பிக்பாக்கெட், சின்னப்பதாஸ், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, வால்டர் வெற்றிவேல், வண்டிச்சோலை சின்ராசு, வில்லாதி வில்லன், அமைதிப்படை என பல மாஸான படங்களைத் தந்தார். முதுமை காலத்திலும் ஆக்ஷனில் தான் நடித்து அசத்தியுள்ளார்.

பாகுபலி படத்தில் கட்டப்பாவாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தார். மெர்சல், ஜாக்சன் துரை, எச்சரிக்கை, நோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நெப்போலியன்

Nepoleon

இவரது உண்மையான பெயர் குமரேசன் துரைச்சாமி. இவர் 1991ல் புதுநெல்லு புதுநாத்து படத்தில் அறிமுகமானார். 1994ல் வெளியான சீவலப்பேரி பாண்டி படத்தில் தான் இவர் முழு ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார்.

ராஜமுத்திரை, அசுரன், எட்டுப்பட்டி ராசா, பகவத் சிங், தென்காசிப் பட்டணம், ஐயா ஆகிய படங்களைச் சொல்லலாம். விருமான்டியைக் கூட சொல்லலாம். இவரது மிடுக்கான தோற்றம் ஆக்ஷன் ஹீரோவாக்கியது என்று சொல்லலாம்.

Next Story