வாங்குறது கடுகளவு.. செய்றது உலகளவு! சல்யூட் போட வைக்கும் காமெடி நடிகர்கள் - பல்பு வாங்கும் ஹீரோக்கள்

Comedy Actors: ஒரு படத்திற்கு ஹீரோயிசம் எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமாக கருதப்படுவது காமெடியும் கூட. ஆனால் இப்பொழுது வரும் படங்களில் காமெடியை பெரிதாக பார்க்க முடியவில்லை. 90கள் காலகட்டத்தில் எல்லாம் குடும்பங்கள் திரையரங்கிற்கு சென்று மகிழ்ச்சியோடு திரும்பிய காலமெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் இப்போது தியேட்டரை விட்டு வெளியே வரும் போதே ஒவ்வொரு முகமும் ரணகளமாக இருக்கிறது.

அந்தளவுக்கு படங்களில் வன்முறைகள் நிறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் காமெடியில் கலக்கிய நடிகர்கள் சமீபகாலமாக பல சமூக சேவைகளை செய்து வருகிறார்கள். கோடிகளை அள்ளும் ஹீரோக்கள் கூட அந்தளவுக்கு செய்வதில்லை. அப்படி எந்த நடிகர்கள் என்னென்ன உதவிகளை செய்திருக்கிறார்கள் என்பதைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

இதையும் படிங்க: கடவுளுக்கு நெருக்கமாக இருந்த ரஜினிகாந்த்..! வைரலான வீடியோ… ரசிகர்கள் உற்சாகம்

காமெடி நடிகர் ஷேஷு: இவர் வடிவேலு, விவேக் அளவுக்கு எல்லாம் பெரிய காமெடி நடிகரெல்லாம் இல்லை. துணை வேடத்தில் நடித்து அதன் மூலம் நகைச்சுவையை வெளிப்படுத்துபவர். சந்தானத்தின் பல படங்களில் ஷேஷுவை காணலாம். ஒரு துணை காமெடி நடிகருக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள் என நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆனாலும் அதை வைத்துக் கொண்டு இல்லாத ஏழை பெண்களுக்கு தன் சொந்த செலவில் திருமணம் செய்து வைத்திருக்கிறாராம். அதே போல் 6 பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறாராம்.

கே.பி.ஒய். பாலா: ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரை மூலம் மிகவும் பிரபலமானவர்தான் இந்த பாலா. டாக் ஆஃப் தி டவுன் என்று சொல்லும் அளவுக்கு பாலாவின் பெயரே இப்போது அடிபட்டுக் கொண்டு வருகின்றது. விஜய் டிவியில் ஆங்கரிங், காமெடி செய்து கொண்டிருந்த பாலா ஆரம்பத்தில் 5000 சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் போதே அதை தனக்காக வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்காக செலவிட்டுக் கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் வாங்கித்தருவது, படிப்பிற்கான செலவுகளை கொடுப்பது, வெள்ள நேரங்களில் ஓடி ஓடி போய் தலா 1000 ரூபாய் கொடுப்பது, இப்போது ஒரு ஊனமுற்றோருக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்திருக்கிறார் பாலா. இவருடைய சம்பளத்தையும் நினைத்துப் பாருங்கள்.

இதையும் படிங்க: குணா படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!.. ஷாக் கொடுத்த சந்தானபாரதி!.. இதெல்லாம் நம்பவே முடியலயே!..

நடிகர் மயில்சாமி: மறைந்த நடிகர் மயில்சாமி ஒரு மிகச்சிறந்த நடிகர். சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி மனிதாபிமானம் உள்ள மிகச்சிறந்த மனிதர் என்றுதான் சொல்லவேண்டும். இவரும் தன் சம்பளத்தை வாங்கியதுமே யாருக்கு கொடுத்து உதவி செய்யலாம் என்றேதான் எண்ணிக் கொண்டிருப்பாராம். மற்றவர்களுக்காகத்தான் நாம் என்ற கொள்கையிலும் இருந்தவர். இருக்கிற வரைக்கும் இவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். இவரும் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கியவரா என்றால் இல்லை.

நடிகர் சம்பூர்னேஷ் பாபு: தெலுங்கில் இவர்தான் நம்பர் ஒன் காமெடி நடிகர்.தனது வித்தியாசமான படைப்பால் மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர்தான் இந்த சம்பூர்னேஷ் பாபு. கொரானா ஊரடங்கு காலத்தில் ஏகப்பட்டோருக்கு இவர் உதவிகளை செய்திருக்கிறார். திரைப்பட செய்தியாளரும், நடிகருமான டி.என்.ஆர் என்பவர் கொரானாவால் உயிரிழந்த போது அவர் குடும்பத்திற்கு இவர்தான் 50000 ரூபாய் கொடுத்து உதவினாராம்.

இதையும் படிங்க: மாஸ் ஹிட் படங்களை மிஸ் பண்ணி மொக்கையான ஸ்ரீகாந்த்… மனுஷன் இப்படியா இருப்பாரு!..

இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் உதவி செய்யும் நிலையிலா இருக்கிறார்கள்? ஆனாலும் செய்கிறார்கள். ஆனால் 100 கோடி 150 கோடி என வாங்கும் ஹீரோக்கள் அதையெல்லாம் வைத்து என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

 

Related Articles

Next Story