பாலிவுட்டே வேணாம்… யூ டர்ன் போட்ட டாப் இயக்குனர்… ஷாருக்கானுக்காக போட்ட ஸ்கெட்டில் சிக்கிய கோலிவுட் ப்ரின்ஸ்?

Published on: September 25, 2023
---Advertisement---

Shah Rukh Khan: தமிழ் சினிமா இயக்குனர்கள் எல்லாம் வரிசையாக பாலிவுட் பக்கம் சென்று கொண்டு இருக்கும் நிலையில், பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறார். முக்கிய இயக்குனர்களில் ஒருவர். அதிலும் ஷாருக்கானுக்காக செய்த கதையில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் தர்பார் படத்தினை கடைசியாக இயக்கி இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படத்தினை தொடர்ந்து அவர் சினிமாவில் மிகப்பெரிய ப்ரேக் எடுத்தார். கோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் எந்த படத்தினையும் ஓகே செய்யாமல் இருந்து வந்தார்.

இதையும் படிங்க: தனி ஒருவன் 2 படத்தின் வில்லன் இவர் தானா? அடடே! இத நாங்க யோசிக்கவே இல்லையே! ரவியின் சர்ப்ரைஸ்!

கஜினி படத்தின் இந்தி ரீமேக் ரிலீஸான சமயத்திலேயே ஷாருக்கான் மற்றும் முருகதாஸ் இணைய இருந்தனர். ஆனால், சில பல காரணங்களால் அப்படம் பேச்சுவார்த்தையுடன் நின்று விட்டது. அதேபோல, விஜயை நான்காவது முறையாக இயக்க இருந்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. 

ஆனால் விஜயின் இயக்குனர் ரேஸில் இருந்தும் விலகினார். இந்நிலையில் முருகதாஸ் அடுத்து சிவகார்த்திகேயனை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சிவாவின் 23வது படமாக உருவாக இருக்கும் இந்த கதையை முருகதாஸ் ஷாருக்கானுக்காக உருவாக்கினாராம்.

இதையும் படிங்க: இன்னைக்கு வரலனா அவ்வளவு தான் பாத்துங்கோங்க… ட்விட்டரில் வம்பு செய்யும் விஜய் ஃபேன்ஸ்… என்ன சேதி?

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக இந்த விஷயத்தினை அறிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், டியர் முருகதாஸ் சார், என்னுடைய 23வது படத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் சொன்ன திரைக்கதையிலும் ரொம்பவே சந்தோஷப்பட்டேன்.

சீக்கிரமாக படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கேன். என் கேரியரில் இந்த படம் ஸ்பெஷலாக இருக்கும். மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 22வது படத்தின் வேலைகள் பிஸியாக இருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.