Connect with us

Cinema News

பின்னால் வரக்கூடிய சம்பவங்களை முன்பே கணித்த திரைப்படங்கள்… ஒரே மர்மமா இருக்கே!!

ஒரு இயக்குனர் தனது அதீத கற்பனையால் சில காட்சிகளை எழுதிவிடுவார். ஆனால் அத்திரைப்படம் வெளிவந்து சில வருடங்களுக்கு பின் அந்த காட்சி சமூகத்தில் திடீரென உண்மையாக நடந்துவிடும்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமெரிக்காவில் வெளிவந்த “தி சிம்ப்சன்ஸ்” என்ற அனிமேஷன் தொலைக்காட்சி தொடரை கூறுவார்கள்.

அதாவது கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக ஆகிவிடுவார்  என அந்த தொடரின் கதையாசிரியர் 1980களிலேயே கணித்து கமலா ஹாரீஸ் போலவே இருக்கும் நபர் ஒருவர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஆவது போல் ஒரு காட்சியை அதில் வைத்திருப்பார். இது தற்செயலாக நடந்துவிட்டது. ஆனால் இது ஒரு மர்மமான விஷயம் போல் இணையத்தில் பேசப்படுகிறது.

இதே போல் பல தமிழ் சினிமாக்களிலும் பின்னால் வருவதை முன்பே கணிக்கும் விதமாக சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்படிப்பட்ட திரைப்படங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

அன்பே சிவம்

2003 ஆம் ஆண்டு கமல்ஹாசன், மாதவன், கிரண் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அன்பே சிவம்”. இத்திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் கமல்ஹாசன். இயக்கியவர் சுந்தர் சி.

இத்திரைப்படத்தில் மாதவனும் கமல்ஹாசனும் ஒரு ஹோட்டலில் தங்குவார்கள். அப்போது வெளியே மழை பெய்துகொண்டிருக்கும். அந்த நேரத்தில் கமல்ஹாசன் மாதவனிடம் “இந்த ஊர் கடலில் சுனாமி எல்லாம் வரும் என்று சொல்வார்கள்” என கூறுவார்.

இத்திரைப்படம் வெளியான அடுத்த ஆண்டு (2004) இந்தியாவை சுனாமி தாக்கியது. சுனாமி என்னும் ஆழிப்பேரலை இந்தியாவிற்கு முன்பே ஜப்பான் போன்ற நாடுகளில் வந்திருக்கிறது. சுனாமி என்ற வார்த்தையே ஜப்பானிய மொழி வார்த்தை தான்.  ஆனால் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இதனை ஒரு தமிழ்படத்தில் கமல் பயன்படுத்தியிருக்கிறார்.

ஏழாம் அறிவு

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகில் பலரையும் தாக்கியது. பல லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியது இந்த வைரஸ். குறிப்பாக இரண்டு ஆண்டுகள் ஊரடங்கில் நாடே முடங்கிப்போனது. பல தொழில்துறைகள் நஷ்டத்தை கண்டது.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான சூர்யா நடித்த “ஏழாம் அறிவு” திரைப்படத்தை சீனாவில் இருந்து ஒரு நோய் பரவுவது போலவும் அதனால் பலரும் உயிரிழந்தது போலவும் காட்சிகள் இடம்பெற்றன.

வாயை மூடி பேசவும்

எப்படி ஏழாம் அறிவு திரைப்படத்தில் சீனாவில் இருந்து ஒரு வைரஸ் பரவுவதாக காட்சி அமைக்கப்பட்டதோ அதே போல் கடந்த 2014 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “வாயை மூடி பேசவும்” திரைப்படத்திலும் இது போன்ற சில காட்சிகளை வைத்திருப்பார்கள். அதாவது ஊர் முழுவதும் ஒரு விநோத நோய் பரவ, யாரும் பேசக்கூடாது என அரசிடம் இருந்து கட்டளைகள் பறந்துவிடும். ஒரு வேளை யாராவது தப்பித் தவறி பேசிவிட்டால் கிருமி நாசினியை தெளித்துவிடுவார்கள். மேலும் அதிக இருமல் வந்தால் நோயின் அறிகுறியாக இருக்கலாம் எனவும் கூறுவார்கள்.

பிச்சைக்காரன்

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் “பிச்சைக்காரன்”. இத்திரைப்படத்தில் ஒரு பிச்சைக்காரர் “500, 1000 ரூபாய் நோட்டுகளை அரசு தடை செய்யவேண்டும். அப்படி தடை செய்தால் தான் லஞ்சம் ஒழியும்” என கூறுவார். அவ்வாறே அதே ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் டிமானிட்டிசேசனை அறிவித்தார் பிரதமர் மோடி.

google news
Continue Reading

More in Cinema News

To Top