முன்னணி நடிகருக்கு கொக்கி போடும் மாஸ் ஹீரோ பட நடிகை... இந்த முறையாவது கனவு நிறைவேறுமா?

by ராம் சுதன் |   ( Updated:2021-12-03 09:25:37  )
tamil cienma gossip
X

படங்களில் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் எப்படியாவது முன்னணி நடிகையாக வரவேண்டும் தென்னிந்தி சினிமாவில் டாப் நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசையில் தான் பிரபல நடிகை ஒருவர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆனால் தற்போது வரை அவர் ஆசை நிறைவேறவே இல்லை.

எப்படியாவது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வரவேண்டும் என்ற ஆசையோடு சினிமாவில் நுழைந்தவர் தான் அந்த நடிகை. முதலில் கோலிவுட்டில் பெரிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டால் மற்ற மொழிகளில் ஈஸியாக பெயர் வாங்கி விடலாம் என கணக்கு போட்டு கோலிவுட்டில் வாய்ப்பு பெற பல முயற்சிகள் செய்தார்.

அவர் முயற்சிக்கு கிடைத்த பலனாக கோலிவுட்டின் உச்ச நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பிரபலமாகி விடலாம் என நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் அந்த படத்தில் நடிகைக்கு மிகவும் சிறிய கேரக்டர் தான். அதிலும் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத கேரக்டர் என்பதால் அந்த படம் நடிகைக்கு கைகொடுக்கவில்லை.

இதனையடுத்து மாஸ் நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிலும் நடிகையின் கேரக்டர் அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த நடிகைக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஒல்லி நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த படமாவது கைகொடுக்குமா என நடிகை புலம்பி வருகிறார்.

இதற்கிடையில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க நடிகை தூது விட்டு வருகிறாராம். அதன்படி தற்போது முன்னணி நாயகன் படம் ஒன்று பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. அந்த படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்பதற்காக தூதுவிடுவதோடு, முன்னணி நடிகரை கவரும் வகையில் சில விஷயங்களையும் நடிகை செய்து வருகிறாராம். இந்த முறையாவது நடிகையின் கனவு நிறைவேறுமா என்பது தெரியவில்லை.

Next Story