லேடி கெட்டப்பில் கலக்கிய தமிழ் மாஸ் நடிகர்கள்!.. இவர் மட்டும் மிஸ் ஆயிட்டாரே?..
எந்தக் கெட்டப் கொடுத்தாலும் அதை ஏற்று நடிப்பவரே ஒரு சிறந்த நடிகர். இந்த முறை அன்றைய காலகட்டத்தில் இருந்தே தொடர்ந்து வரும் நடைமுறையாக இருந்து வருகிறது. சிவாஜி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. ஏதாவது இருந்தாலும் அது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
பார்க்கிற நாம் அவரை அனைத்து கெட்டப்களிலும் பார்த்து விட்டு மகிழ்ந்தோம். அந்த வகையில் அனைத்து கெட்டப்களையும் ஏற்று நடிக்கும் நடிகர்கள் ஒரே ஒரு கெட்டப்பை போடுவதற்கு மட்டும் சில நடிகர்கள் தயங்குவார்கள்.
இதையும் படிங்க : விஜயகாந்திற்காக ஃபிளாட்டையே எழுதி வைத்த தயாரிப்பாளர்!.. இதற்கெல்லாம் மயங்கிற ஆளா?.. பின்னனியில் இருக்கும் சோகக்கதை..
அது தான் லேடி கெட்டப். சில நடிகர்கள் துணிச்சலாக ஒப்புக்கொள்வார்கள். சில நடிகர்கள் தயங்குவார்கள். அந்த வகையில் காதல்வாகனம் படத்தில் எம்ஜிஆர் லேடி கெட்டப்பில் நடித்தி அசத்தியிருப்பார். அதே போல் குங்குமம் திரைப்படத்திலும் சிவாஜி அற்புதமாகவே நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
அது அப்படியே பயணம் செய்து 80களில் ரஜினி, கமல் காலத்திலும் அது தொடர்ந்தது. ரஜினி பணக்காரன் படத்தில் ஒரு பாடலில் பெண் வேடம் போட்டு நடித்திருப்பார். கமல் பற்றி சொல்லவே வேண்டாம். படம் முழுக்க அவ்வைசண்முகியாகவே மாமி வேடத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருப்பார்.
அதே போல் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் மிக அருமையாக லேடி கெட்டப் போன்று கொண்டு பிரமிக்க வைத்திருப்பார். இவர்கள் லிஸ்டில் சிவகார்த்திகேயன் ரெமோவாக சிரிக்க வைத்தார். இவர்களை எல்லாம் தாண்டி மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவரான விஜயே பிரியமானவளே படத்தில் ஒரு பாடலில் சில வினாடிகளே லேடி கெட்டப் போட்டு கொண்டு நடித்திருப்பார். ஆனால் முதலில் அதை மறுத்து வந்த விஜய் தன் மகன் பிறந்த சந்தோஷத்தில் சம்மதித்திருக்கிறார்.
இப்படி பிரசாந்த், விஷால், சூர்யா, சரத்குமார், சத்யராஜ் என அனைத்து முன்னனி நடிகர்களும் நடித்திருக்கும் லேடி கெட்டப்பில் நம்ம தல மட்டும் சிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.