More
Categories: Cinema News latest news

மாஸ் ஹிட்டான தமிழ் படங்களை, ரீமேக் என்ற பெயரில் பாலிவுட் செய்யும் டாப் 5 நாசங்கள்… உங்க அலும்பு தாங்கலடா!

தமிழ் சினிமாவில் மெகா ஹிட்டான தமிழ் படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்கள் பாணிக்கு படத்தில் மாற்றங்கள் செய்யும் போது அது ஒரிஜினல் படத்தின் தன்மையை வெகுவாகவே பாதித்து விடுகிறது.

கைதி:

Advertising
Advertising

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் கைதி. லுங்கி கட்டிக்கொண்ட அக்மார்க் கிராமத்துக்காரனாக ஜெயில் இருந்து வெளிவருவார் கார்த்தி. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அவர் சாப்பிட்ட பிரியாணியே செம வைரல். இப்படத்தினை ஹிந்தியில் போலா என்ற பெயரில் ரீமேக் செய்து இருக்கிறார்கள். கார்த்தி வேடத்தில் அஜய் தேவ்கான் நடித்திருக்கிறார். இதில் லாரிலாம் இல்லையாம், காரு தானாம். இந்த ஒரு வரியே போதும் ரீமேக் என்ன சொதப்பலாக இருக்கும் என்று.

Kaithi

சின்னத்தம்பி:

1992ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம். இதில் பிரபு, குஷ்பூ, கவுண்டமணி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தினை பாலிவுட்டில் அனாரி என்ற பெயரில் ரீமேக் செய்தனர். வெங்கடேஷ் நாயகனாக நடித்திருந்தார். குழந்தைத்தனமாக பிரபு நடித்ததை ரசித்த அனைவருமே, வெங்கடேஷ் செய்யும் போது எரிச்சல் ஆனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Chinna thambi

ஜிகர்தாண்டா:

தமிழில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இது கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்தியில் பச்சன் பாண்டே (2022) என ரீமேக் செய்யப்பட்டது. அக்‌ஷய் குமார் பாபி சிம்ஹா வேடத்தில் நடித்தார். அசால்ட் சேதுவின் அறிமுக ட்யூனை இதில் பயன்படுத்தி இருந்தால் கூட இந்த காட்சியை பார்த்து பலரும் கலாய்க்க தான் செய்தார்களாம். வித்தியாசம் என்ற பெயரில் சித்தார்த் பாத்திரத்தில் நடித்தவர் கிருத்தி சனோனாம். அய்யோ!

Jigarthanda

ராட்சசன்:

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசாகி மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன். இந்த படத்தினை பாலிவுட்டில் கட்புட்லி என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அக்‌ஷய் குமார் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தனர். அக்‌ஷய் கெட்டப்பை பார்த்தால் ஹீரோவாக நடிக்கிறாரா இல்லை ராட்சசன் கிறிஸ்டோபர் வேடமா என்ற சந்தேகமே வந்துவிடும். அதை விட இந்தி பட கிறிஸ்டோபரை பார்க்கிறப்போ சிரிக்கவா? அழுகவானே தெரியல அவ்வளோ கொடுமை.

Saamy

சாமி:

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படம் சாமி. இப்படத்தின் ஒவ்வொரு காட்சியுமே மாஸாக நடித்திருப்பார் விக்ரம். இப்படத்தின் இந்தி ரீமேக்கான போலீஸ்கிரியில் நடித்தவர் சஞ்சய் தத். இந்த கொடுமையை செஞ்சதும் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தானாம். ஏன் சார் உங்களுக்கு இந்த கொலவெறி?!

இதையும் படிங்க: இந்த காரணத்தால் தான் நயனால் பையா படத்தில் நடிக்க முடியவில்லை… சீக்ரெட்டை உடைத்த லிங்குசாமி

Published by
Akhilan

Recent Posts