கோலிவுட்டை அலங்கரிக்கும் சின்னத்திரை நடிகைகள்!.. வாய்ப்பை இழக்கும் முன்னனி நடிகைகள்!..
தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் வரவால் கோலிவுட்டே தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. 90களில் எல்லாம் நிரந்தரமான நடிகைகளாக சிம்ரன், குஷ்பூ, ரேவதி, ரோஜா என பல முன்னனி நடிகைகள் தான் மாறி மாறி பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தனர்.
அதனாலேயே அவர்களை மக்கள் இன்றளவும் மறக்காமல் மனதில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் இந்த தலைமுறையில் டிவியில் இருந்து சோசியல் மீடியாக்களில் இருந்து டிக்டாக் வீடியோக்களில் இருந்து பிரபலமான பல நடிகைகள் சினிமாவிற்குள் வந்து கொண்டே இருக்கின்றனர்.
அதுவும் போக சினிமா ஆசையினால் அவர்களும் கிடைத்த சின்ன சின்ன ரோல்களில் நடிக்க தயாராக இருப்பதால் புதுமுக இயக்குனர்களாகட்டும் சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களாகட்டும் அவர்களை தான் தேடி போகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து இன்று பிரபலமான நடிகைகளைத்தான் பார்க்கப் போகிறோம்.
நடிகை வாணிபோஜன் : சன் டிவியில் தெய்வமகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணிபோஜன். சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லுமளவிற்கு பார்ப்பதற்கு ஒரு சாயலில் நயன் மாதிரியே இருக்கிறார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும் இப்போது ஓரளவு ரசிகர் பட்டாளம் உருவாகி விட்டது.
நடிகை பிரியா பவானி சங்கர் : விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பிரியா பவானி சங்கர். அந்த ஒரு சீரியலில் கிடைத்த புகழை வைத்து வெள்ளித்திரைக்கு வந்தவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் இன்று கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் அளவுக்கு பெரும் புகழைப் பெற்றிருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் : மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்ஸராக அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதல் என சின்னத்திரையில் இருந்து வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரும் ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களை தேடி தேடி போய் நடித்தார். எதார்த்தமான நடிப்பை வழங்கக் கூடிய நடிகை. இப்போது கோலிவிட்டே தேடும் ஒரு நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.
நடிகை சாய்பல்லவி : உங்களில் யார் பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் டான்ஸராக வந்தவர் தான் சாய்பல்லவி. அதனை தொடர்ந்து பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர். அந்தப் படத்தின் வெற்றி ரசிகர்கள் முன்னிலையில் மலர் டீச்சராகவே பிரதிபலித்தது. தமிழில் சொல்லும்படியான படங்கள் வரவில்லை என்றாலும் தெலுங்கு, மலையாளத்தில் எல்லா நடிகைகளையும் ஓவர் டேக் செய்து போய்க் கொண்டிருக்கிறார்.
இவர்களை போல் பட்ஜெட் பார்க்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தாலே மக்கள் எளிதில் நடிகைகளை மறக்க மாட்டார்கள். அதை விட்டு எனக்கு மார்கெட் தான் முக்கியம், பட்ஜெட் தான் முக்கியம், சம்பளம் தான் முக்கியம்
என்று இருந்தால் கிடைக்கும் வாய்ப்புகள் கூட போய்விடும். அதற்கு உதாரணமாக நயன்தாராவை கூறலாம். இப்போது கமிட் ஆன பெரும்பாலான படங்கள் அவரை விட்டு போய்விட்டன. இதே போல பல நடிகைகள் இருக்கின்றனர்
இதையும் படிங்க : நாய் நல்லா நடிச்சிருக்கு சத்யராஜ்!.. கவுண்டமணி கொடுத்த சரியான கவுண்டர்!.. சிரிச்சு சிரிச்சு வயிறே வலிச்சிருச்சு!..