பிறமொழி ஹீரோக்களை காலி செய்யும் தமிழ் பட இயக்குனர்கள்!. எல்லாம் பிளானா?!…

80களிலேயே தமிழ் சினிமா இயக்குனர்கள் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார்கள். பாலச்சந்தரெல்லாம் ஒரே நேரத்தில் ஒரு கதையை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கினார். பாரதிராஜா கூட தமிழில் ஹிட் அடித்த பதினாறு வயதினிலே படத்தை ஹிந்தியில் எடுத்தார். பாலச்சந்தரெல்லாம் கமலை வைத்து ஏக் துஜே கேலியே போன்ற நேரடி ஹிந்தி படங்களையும் இயக்கியிருக்கிறார்.
பாரதிராஜாவுக்கு பின் அவரின் சிஷ்யர் பாக்கியராஜ் ஹிந்திக்கு போய் பல படங்களையும் இயக்கினார். இயக்குனர் ஷங்கர் கூட தனது முதல்வன் கதையை ஹிந்தியில் எடுத்திருக்கிறார். இப்போதும் தமிழ் பட இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் பாலிவுட்டுக்கு போய் வேலை செய்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் கூட அமீர்கானை வைத்து கஜினி படத்தை ஹிந்தியில் எடுத்து ஹிட் கொடுத்தார். அதேபோல், கே.எஸ்.ரவிக்க்குமார் ஆந்திராவுக்கு போய் பாலகிருஷ்ணாவை வைத்து படமெடுத்தார்.

ஆனால், கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்ற மொழி நடிகர்களை வைத்து எடுக்கும் படங்கள் ஓடுவது இல்லை. அதுவும் மற்ற மொழியில் முன்னணி நடிகர்களை வைத்து பிளாப் கொடுப்பதை தமிழ் பட இயக்குனர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். சல்மான்கானை வைத்து பிரபுதேவா எடுத்த படங்கள் பிளாப் ஆனது.
மலையாள நடிகர் மம்முட்டியை வைத்து கவுதம் மேனன் இயக்கிய டாமினிக் படம் சூப்பர் பிளாப். இந்த படத்தை மம்முட்டியே தயாரித்தும் இருந்தார். இந்த படத்தால் அவருக்கு நஷ்டம் என சொல்லப்படுகிறது. தெலுங்கில் உச்சத்தில் இருந்த ராம்சரணை வைத்து கோலிவுட் பட இயக்குனர் ஷங்கர் எடுத்த கேம் சேஞ்சர் படம் படு தோல்வி. இந்த படத்தால் தில் ராஜுவுக்கு 150 கோடிக்கும் மேல் நஷ்டம் என்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து லிங்குசாமி இயக்கிய வாரியர், நாக சைதன்யாவை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய கஸ்டடி போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. அதேபோல், ஏ.ஆர்.முருகாதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்து சமீபத்தில் வெளியான சிக்கந்தர் படமும் படு தோல்வி அடைந்திருக்கிறது. மேலும், நம்மூர் விஜய் மில்டன் இயக்கத்தில் கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் நடித்து வெளியான பைரகி படமும் பிளாப் ஆகியிருக்கிறது.
இப்படியே போனால் கோலிவுட் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவே மற்றமொழி நடிகர்கள் யோசிப்பார்கள் என கருதப்படுகிறது. ஒருபக்கம் அட்லியின் இயக்கத்தில் புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.