தமிழ்சினிமாவில் நடிக்கும்போது தான் எனக்கு பரமதிருப்தி - சொல்கிறார் மதுபாலா
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்...என்று பால்வடியும் முகம்தனில் பார்வையால் நம்மை வசியம் செய்தவர் மதுமிதா. சிரிக்கும்போது விழும் கன்னக்குழி அழகு நம் மனதின் பாரத்தைக் குறைத்து விடும்.
90களில் ஏராளமான உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். பாலிவுட்டில் நடித்ததை விட தமிழ்ப்படங்களில் நடிக்கும்போதுதான் எனக்கு ஒரு பரமதிருப்தி கிடைத்தது என்று தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
ரோஜா
1992ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ரோஜா. பாலசந்தர் தயாரிப்பில் வெளியானது. அரவிந்த்சாமி, மதுபாலா, ஜனகராஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம்.
பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. ருக்குமணி, சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே, புது வெள்ளை மழை, தமிழா தமிழா ஆகிய பாடல்கள் உள்ளன.
ஜென்டில்மேன்
1993ல் ஷங்கர் இயக்கிய படம். கே.டி.குஞ்சுமோன் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, எம்.என்.நம்பியார், கவுதமி, செந்தில், வினீத், சரண்ராஜ், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனமாடியுள்ளார். பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். என்வீட்டுத் தோட்டத்தில், ஒட்டகத்தைக் கட்டிக்கோ, சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு உள்பட பல பாடல்கள் உள்ளன.
பாஞ்சாலங்குறிச்சி
1996ல் வெளியான இப்படத்தை சீமான் இயக்கினார். பிரபு, மதுபாலா, வடிவேலு, விஜயகுமார், சந்திரசேகர், பிரசன்னா, இளவரசி, மகேஸ்வரி, இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர்.
தேவாவின் தெவிட்டாத இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள். ஆனா, ஆவன்னா, ஆசை வைத்தேன், சின்ன சின்ன, சின்னவளே, காற்றை நிறுத்தி, ஒரு பக்கம் தேன், உன் உதட்டோர, வந்தீயளா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மிஸ்டர் ரோமியோ
1996ல் வெளியான இப்படத்தை இயக்கியவர் ரவி. ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் வெளியானது. பிரபுதேவா, ஷில்பா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசையே, மோனாலிசா, முத்து முத்து, தண்ணீரைக் காதலிக்கும், யாரது உள்பட பல பாடல்கள் உள்ளன.
இந்தப்படத்தில் பாடல்களுக்கு பிரபுதேவா டான்ஸ் அமர்க்களமாக இருக்கும். இவருடன் போட்டி போட்டுக்கொண்டு நாயகிகள் ஷில்பா ஷெட்டியும், மதுபாலாவும் டான்ஸ் பண்ணி பட்டையைக் கிளப்பியிருப்பார்கள்.
செந்தமிழ் செல்வன்
1994ல் வெளியான இப்படத்தை மனோஜ்குமார் இயக்கினார். எம்.எஸ்.வி.முரளி தயாரித்த படம். பிரசாந்த், மதுபாலா, சிவரஞ்சனி, செந்தில், சுஜாதா, விஜயகுமார், சார்லி, வாகை சந்திரசேகர், உதயபிரகாஷ், சண்முகசுந்தரம், மோகன் நடராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.