திரையிசைப் பாடல்கள் உருவான விதம்....தமிழ்சினிமாவில் பாட்டெழுத படையெடுத்த கவிஞர்கள்...!
தமிழ்சினிமாவில் ஆரம்பகால கட்டங்களில் பக்திப்பாடல்களுகம், கீர்த்தனைகளும் தான் இடம்பெற்றது. அதன் பின்னர் தான் பாடலாசிரியர்கள் தேவைப்பட்டனர். அப்போது பின்னணிப்பாட தனியாக பாடகர்கள் இல்லை. கதாநாயகனோ, கதாநாயகியோ தான் பாட வேண்டும்.
படப்பிடிப்பு தளத்திலேயே குறிப்பிட்ட காட்சியைப் படமாக்குவர். அதே நேரம் பாடலையும் பாடச்செய்து ஒலிப்பதிவு செய்வர். அந்தக்காலத்தில் கதாநாயகி, கதாநாயகன் என்றால் அவ்வளவு திறமையும் இருக்க வேண்டும். குறிப்பாக சங்கீதம் பாடத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் எம்.கே.தியாகரா ஜபாகவதர், கிட்டப்பா, எம்.கே.ராதா போன்றவர்கள்.
மதுர பாஸ்கர தாஸ், பூமி பாலகதாஸ், டி.கே.சுந்தர வாத்தியார், லட்சுமண தாஸ், பாபநாசம் சிவம், ராஜகோபாலய்யர், பாரதிதாசன், வேல்சாமிக் கவி, ச.து.சு.யோகியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, உடுமலை நாராயணகவி, முகவை ராஜமாணிக்கம், கே.பி.காமாட்சி, கம்பதாசன், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கொத்தமங்கலம் சுப்பு, சுத்தானந்த பாரதியார், தஞ்சை ராமையா தாஸ், கே.டி.சந்தானம், கா.மு.ஷெரீப், மருதகாசி, சுரபி, நாஞ்சில் நாடு ராஜப்பா, கண்ணதாசன், எஸ்டி.சுந்தரம், மு.கருணாநிதி, சுரதா, ராஜகோபால், கு.மா.பாலசுப்ரமணியம், குயிலன், அண்ணல் தங்கோ, விந்தன், சுப்பு ஆறுமுகம், எம்.கே.ஆத்மநாதன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், வில்லிபுத்தன், லட்சுமணன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரைச் சொல்லலாம்.
அதன்பிறகு வந்த கவிஞர்கள் என்றால் பி.கே.முத்துச்சாமி, முத்துக்கூத்தன், வாலி, ஆலங்குடி சோமு, மருதகாசி, கொத்தமங்கலம் சுப்பு, மாயவநாதன், பஞ்சு அருணாசலம், திருச்சி தியாகராஜன், பூவை செங்குட்டுவன், அவினாசி மணி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன், கங்கை அமரன், டி.ராஜேந்தர், வைரமுத்து, மு.மேத்தா, குருவிக்கரை சண்முகம், எம்.எஸ்.சுப்பிரமணியம், டி.கே.சண்முகம், கே.தேவநாராயணன், வி.சீத்தாராமன், சிதம்பரம் வரதராசன், புரட்சிதாசன், பா.ஆதிமூலம், இரா.பழனிச்சாமி, கோவை குமரேசன், ஈழத்து ரத்தினம், முடியரசன், உளுந்தூர்பேட்டை சண்முகம், நெல்லை அருள்மணி, பல்லடம் மாணிக்கம், மல்லியம் ராஜகோபால், தஞ்சைவாணன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் யார் கண்ணன், ஆற்றலரசு, காமகோடியான், சிதம்பரநாதன், காளிதாசன், எம்.ஜி.வல்லப்பன், கண்மணி சுப்பு, இளையபாரதி, பொன்னடியான், ஆபாவாணன், பிறைசூடன், எஸ்.ஏ.ராஜ்குமார், ஜீவாபாரதி, ஆர்.வி.உதயகுமார், ஜெயகாந்தன், வேம்பத்தூர் கிருஷ்ணன், கி.வா.ஜெகன்னாதன், ஜெயகாந்தன், தமிழழகன், பூங்குயிலன், எஸ்.என்.ரவி, அடியார், காளிமுத்து, இளவேனில், சிற்பி, கங்கை கொண்டான், வலம்புரி ஜான் என படையெடுத்தனர். அதுமட்டுமின்றி சமீப நாள்களில் அறிவுமதி, கபிலன், நா.முத்துக்குமார், பா.விஜய், பழனிபாரதி, யுகபாரதி, முத்து விஜயன், ஆண்டாள் பிரியதர்ஷினி, கலைக்குமார், இரா.இரவிசங்கர், தாமரை, சினேகன், இளையகம்பன், கங்கை அமரன், டி.ராஜேந்தர், கமல்ஹாசன் ....என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இன்னும் சொல்லப்போனால் காலத்தால் அழியாத பல கவிஞர்கள் வரிசையில் கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், வாலி, வைரமுத்து ஆகியோரும் உள்ளனர்.
பொதுவாகத் திரைப்படத்தின் காட்சிக்கு ஏற்ப தான் பாடல் அமைக்க வேண்டும். இதனால் பாடல் ஆசிரியர் கதைக்கும் காட்சிக்கும் ஏற்ப தான் பாடல் எழுத வேண்டியுள்ளது. கதைக்கு ஏற்பவும் எழுத வேண்டும். அதே நேரம் சமூக சிந்தனையும் அதில் உறைந்திருக்க வேண்டும். அப்படி எழுதும் பாடல்கள் காலத்தால் அழியாத காவியப்பாடல்களாகின்றன.
பாடல்களுக்காகவே ஓடிய படங்களும் உள்ளன. ஒரு படத்தின் பாடல்களைக் கொண்டே படம் நல்லாருக்குமா இருக்காதா என அக்காலத்து ரசிகர்கள் கணித்துவிடுவர். முற்போக்கு சிந்தனைகள், பகுத்தறிவு கொள்கைகள், சமகால அரசியல், நாட்டு நடப்புகள் என தமிழ்சினிமாவில் பாடல்கள் சொல்லாத கருத்துகளே இல்லை எனலாம்.
மொத்தத்தில் அக்கால திரைப்படப்பாடல்கள் மக்களின் சீரிய வாழ்விற்கு அடித்தளமாக அமைந்தன என்று சொன்னால் மிகையில்லை.