அம்மா என்றால் அன்பு.. தாயின் பெருமையை சொல்லி வெளியான படங்கள் - ஒரு பார்வை

by sankaran v |
அம்மா என்றால் அன்பு.. தாயின் பெருமையை சொல்லி வெளியான படங்கள் - ஒரு பார்வை
X

Adimai penn

அம்மா என்ற இந்த மூன்றெழுத்துக்கு எவ்வளவு சக்தி உள்ளது என்பதை உலகில் உள்ள அனைத்து உயிர்களுமே உணரும். அன்பின் மறு உருவம் அம்மா தான். அதனால் தான் அம்மா என்றால் அன்பு என்ற பாடல் கூட தமிழ்சினிமாவில் இடம்பெற்றுள்ளது.

இனி அம்மாவின் சிறப்புகளையும், அருமை பெருமைகளையும் நாம் எத்தனையோ பாடல்களில் கேட்டிருப்போம். அவற்றில் ஒரு சிலவற்றைப் பற்றியும் அவை என்ன படங்களில் இடம்பெற்றுள்ளன என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.

அகத்தியர்

Agathiyar

தாயிற்சிறந்த கோவிலுமில்லை...தந்தை சொல்மிக்க மந்திரமில்லை பாடல் கே.பி.சுந்தராம்பாள் என்று ஒரு சூப்பரான பாடல் அகத்தியர் படத்தில் இடம் பெற்றுள்ளது. குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் டி.கே.கலா பாடியுள்ளார்.

இந்தப்படம் வெளியான ஆண்டு 1972. பூவை செங்குட்டுவன் எழுதிய பாடல் இது. ஏ.பி.நாகராஜன் இயக்கியுள்ள பக்தி மணம் கமழும் இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையுமே சூப்பர்ஹிட் தான்.

உலகம் சமநிலை, ஆண்டவன் தரிசனமே, மலையினின்ற திருக்குமரா, வென்றிடுவேன் உன்னை, கண்ணைப் போல மண்ணைக் காக்கும், நடந்தாய் வாழி காவேரி, தலைவா தவப்புதல்வா, இசையாய் தமிழாய், நமசிவாயமென சொல்வோமே, முழுமுதற் பொருளே ஆகிய பாடல்களும் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.

தாயிற்சிறந்த கோவிலுமில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற இந்தப்பாடலில் பொறுமையை மிஞ்சும் தாய் மனம் உண்டு. ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை. அன்னை தந்தையே அன்பின் எல்லை என்று அன்னையின் பெருமையை தெளிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் பாடல்.

அதே படத்தில் தன்னலமற்றது தாயின் நெஞ்சம், தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் என கடவுள் உடன் தாயை ஒப்பிட்டு சொல்கிறது பாடல். அந்த அளவு தாயானவள் உயர்வாக இருக்கிறாள். இதே பாடலில் தந்தையின் பெருமையும் சொல்லப்பட்டுள்ளது.

அடிமைப்பெண்

தாயில்லாமல் நானில்லை என்று ஒரு பாடல். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படத்தில் தான் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது. 1969ல் வெளியான இந்தப்படத்தில் எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்துள்ளார்.

ஆலங்குடி சோமு எழுதியுள்ள இந்தப் பாடல் தாயின் பெருமையை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. இதே படத்தில் அம்மா என்றால் அன்பு என்று தாயின் பெருமையை சொல்லும் பாடலை ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடி அசத்தியிருந்தார்.

இந்தப்பாடல் எக்காலத்தில் கேட்டாலும் அனைவருக்கும் பிடித்தமான பாடலாகவே இருக்கும். இந்தப்பாடலில் தவறினைப் பொறுப்பாள். தர்மத்தை வளர்ப்பாள். தரணியிலே வளம் சேர்த்திடுவாள் என்று ஒரு அடி வரும். என்ன ஒரு அற்புதமான வரிகள். பாடலின் முடிவில் ஆதி அந்தமும் அவள் தான். நம்மை ஆளும் நீதியும் அவள் தான் என்றும் தாயைப் போற்றிப் பாடல் வரிகள் அமைந்திருக்கும்.

தேடிவந்த மாப்பிள்ளை

தேடிவந்த மாப்பிள்ளை என்ற படம் 1970ல் வெளியானது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த படம். கவிஞர் வாலியின் முத்தான வரிகளில் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதில் தாயின் பெருமை அழகுற சொல்லப்பட்டுள்ளது.

அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம் பிள்ளையினால் பன்னீராகும் என்ற வரிகள் தாயானவள் பிள்ளையை வளர்க்க எப்படி எப்படி எல்லாம் அரும்பாடு படுகிறாள் என்று தௌ;ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மன்னன்

Mannan

மன்னன் என்ற படத்தில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலில் அம்மாவை வணங்காது உயர்வில்லையே என்று அற்புதமாக பாடியுள்ளார்.

இந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். கே.ஜே.யேசுதாஸின் குரலில் பாடல் காதில் தேனாகப் பாய்கிறது.

இந்தப்படத்தில் ரஜினிகாந்த், விஜயசாந்தி, பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர். ரஜினிகாந்தின் அம்மாவாக பழம்பெரும் நடிகை பண்டரிபாய் நடித்துள்ளார்.

அரண்மனைக்கிளி

என் தாயென்னும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...என்ற ராஜ்கிரண் பாடல் அரண்மனைக்கிளி படத்தில் இடம்பெற்றுள்ளது. தாய் தனக்கு புத்திமதி சொல்லும்போது அதைக் கேட்காமல் அசட்டை செய்தேன்.

நான் ஒரு பாவி என்பதை புத்திமதி சொல்லையிலே தட்டிச் சென்ற பாவியடி...என்று மனம் வருந்திப் பாடுகிறார். அதே பாடலில் தன் உயிரைப் பட்டினி போட்டு என்னுயிரை வளர்த்தவளே...தன்னந்தனியா இருந்து என்னைக் கரை சேர்த்தவளே என்றும் பாடியுள்ளார். இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பொன்னடியான்.

தூங்காதே தம்பி தூங்காதே

TTT

நானாக நானில்லை தாயே என்ற ஒரு அருமையான பாடல். தாயின் பெருமையை அவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லும். பாடல் இடம்பெற்ற படம் தூங்காதே தம்பி தூங்காதே. இளையராஜாவின் இன்னிசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியுள்ளார்.

1983ல் வெளியான இந்தப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். வாலியின் வைர வரிகளால் இந்தப் பாடல் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது. கமல், ராதா, சுலக்ஷனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

Next Story