Categories: latest news

மே மாசம் யார் யார் படங்கள் ரிலீஸ் ஆக போகுதுனு தெரியுமா? அடிக்கிற வெயிலுக்கு இது பரவாயில்லை

Tamil Movies: சமீப காலமாக கோலிவுட்டில் எந்த ஒரு பெரிய நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு மாறாக மலையாள சினிமாவில் இருந்து சின்ன பட்ஜெட்டில் உருவானாலும் நல்ல கதைக்களம் உள்ள பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையே அந்த மலையாள படங்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றன.

மஜ்மல் பாய்ஸ், ப்ரேம்ச்லு,  இப்பொழுது சமீபத்தில் ரிலீசான ஆவேசம் போன்ற மலையாள திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கின்றன. ஆனால் கோலிவுட்டில் இது நாள் வரைக்கும் பெரிய நடிகர்களான விஜய், ரஜினி, அஜித், கமல், சூர்யா போன்ற நடிகர்களின் எந்த ஒரு படங்களும் வெளியாகாமல் இருக்கின்றன.  இந்த நிலையில் மே மாதத்தில் மூன்று திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இதையும் படிங்க: யாரும் செய்யாத சாதனை!. இலங்கையிலும் அசால்ட் செய்த நடிகர் திலகம்!.. படம் இவ்வளவு நாள் ஓடியதா?!..

அரண்மனை 4 : சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அரண்மனை 4. இந்தப் படம் மூன்று பாகங்களாக இதுவரை ரிலீஸ் ஆகி இருக்கின்ற., முதல் பாகத்தில் வினை – ஹன்சிகா இரண்டாம் பாகத்தில் சித்தார்த் – த்ரிஷா மூன்றாம் பாகத்தில் ஆர்யா – ராசி கண்ணா என சுந்தர்சியுடன் முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம். இப்பொழுது இந்த படத்தின் நான்காம் பாகம் தயாராகியுள்ளது. மேலும் இந்த மாதம் அரண்மனை 4 அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு நான் தான் கிங்கு:  சந்தானம் நடிக்கும் புதிய படம் தான் இங்கு நான் தான் கிங். ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம். வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிக்கும் இந்த புதிய படத்தை ஆனந்த் நாராயணன் இயக்கியிருக்கிறார். சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து தம்பி ராமையா, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், லொள்ளு சபா மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படமும் மே மாதத்தில் தான் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமானை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?.. பின்னணியில் இருப்பது யார்?!.. பகீர் தகவல்!..

மகாராஜா: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா. இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருக்கிறார். சமீப காலமாக விஜய் சேதுபதி ஒரு பேன் இந்தியா நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் ஹிந்தி என அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி இப்போது நீண்ட நாளுக்கு பிறகு இந்த மகாராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார். இந்த படமும் மே மாதம் ரிலீஸ் என்று தான் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பிரபல ஹிந்தி இயக்குனரான அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

8 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

15 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

16 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

17 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago