Connect with us
banner

50களில் எடுக்கப்பட்ட தமிழ் படங்களும், சுவாரசியமான சில தகவல்களும்

Cinema History

50களில் எடுக்கப்பட்ட தமிழ் படங்களும், சுவாரசியமான சில தகவல்களும்

1950களில் அதாவது சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நமக்கு தமிழ்ப்படங்கள் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் வரும்.

அந்தக்கால பெரியவர்களிடம் கேட்டால் இது போன்ற சில தரமான சம்பவங்களைத் தொகுத்து கதை கதையாகச் சொல்வார்கள். உங்களுக்கும் அதுபோன்ற சில பாடங்கள் வருமாறு.

ஏழை படும் பாடு

1950ல் வெளியானது இந்தப்படம். படத்தின் இயக்குனர் கே.ராம்நாத். இந்தப்படத்தின் ஹீரோ சீதாராமன். இவர் ஜாவட் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதனால் அந்தப் பெயரே பிற்காலத்தில் மருவி ஜாவர் சீதாராமன் ஆனது.

அந்தக்காலத்தில் பட்சி ராஜா ஸ்டூடியோவின் தயாரிப்பு என்றாலே படம் பட்டையைக் கிளப்பும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்தப்படமும் அதன் தயாரிப்பு தான். சித்தூர் வி.நாகையா படத்தின் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

எம்.என்.ராஜம், டி.எஸ்.பாலையா, பத்மினி, லலிதா, குமாரி என்.ராஜம், என்னத்த கன்னையா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் எம்.எஸ்.சுப்பையா நாயுடு.

பாரிஜாதம்

tamil movies sonhhs

இந்தப்படம் 1950ல் வெளியானது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா, காகா ராதாகிருஷ்ணன், என்எஸ்கே., டி.ஏ.மதுரம், பி.எஸ்.சரோஜா, புளிமூட்டை ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

பொன்முடி

1950ல் வெளியான இப்படத்தின் இயக்குனர் எல்லிஸ் டங்கன். கதை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன். இவர் எழுதிய எதிர்பாராத முத்தம் என்ற கதை தான் படமாக மாறியது.

கதையில் சில பகுதிகளை மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பி.வி.நரசிம்ம பாரதி, எம்.ஜி.சக்கரபாணி, காளி என்.ரத்னம், சரஸ்வதி, மர்துரி தேவி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்.

மச்சரேகை

பி.புள்ளையாவின் இயக்கத்தில் 1950ல் வெளியான படம் மச்சரேகை. சி.ஆர்.சுப்புராமன் இசை அமைத்துள்ளார். டி.ஆர்;.மகாலிங்கம், பி.ஆர்.பந்துலு, வி.கே.ராமசாமி, எஸ்.வரலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் செம மாஸ் ரகம்.

லைலா மஜ்னு

1950ல் எப்.தாகூர் இயக்கிய படம் லைலா மஜ்னு. டி.ஆர்.மகாலிங்கம், என்எஸ்கே., சகஸ்ரநாமம், ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.வி.ராஜம்மா, டி.ஏ.மதுரம், வி.என்.ஜானகி, பி.கண்ணாம்பா உள்பட பலர் நடித்துள்ளனர்.

எஸ்.வி.வெங்கட்ராமன் இசை படத்திற்கு பிளஸ் பாயிண்ட். லைலா மஜ்னுவின் காதல் கதையைப் படத்தில் நேரில் கண்டதுபோல செதுக்கியிருப்பார்கள்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top