Connect with us

Cinema History

தமிழ்சினிமாவில் சிங்க நடை போடும் ராஜயோக நடிகர்கள் இவர்கள் தானோ?!

தமிழ்சினிமாவில் ராஜ் என்று முடியும் பெயர் கொண்ட பல நடிகர்கள் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் முன்னணி நடிகர்களாகத் தான் ஒரு காலத்தில் வலம் வந்தனர். இப்போது இவர்களில் ஒரு சிலரே தனக்கான இடத்தில் இருந்து வருகின்றனர். ராஜ் என்றாலே ராஜ யோகம் என்பர்.

தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை உள்ளடக்கியவர்களாகத் தான் இவர்கள் இருப்பார்கள். அடுத்தவர்கள் விஷயத்திலும் சரி. அவர்களின் பாணியைக் கடைபிடிப்பதிலும் சரி. இவர்கள் விலகி விடுவர். தனக்கென இருக்கும் தனி பாணியை மட்டுமே கடைபிடித்து அதன்படி நடப்பார்கள். அவர்கள் பற்றிய சில விசேஷமான தொகுப்பு இது.

சத்யராஜ்

தமிழ்சினிமாவில் வில்லனாக இருந்து கதாநாயகனாகி குணச்சித்திர நடிகராகி ஒரு ரவுண்டு வலம் வந்து கொண்டிருப்பவர் சத்யராஜ். இவர் தான் ஏற்கும் ஒவ்வொரு கேரக்டரையும் தனக்கென உள்ள தனி பாணியில் அதை மிளிரச் செய்வார்.

பேசுவதிலும் சரி. இவரைப் போல வேறு ஆள் கிடையாது. எம்ஜிஆரின் பரம ரசிகர் இவர். இவரது நண்பர் மணிவண்ணன். இருவரும் நடிக்கும் படங்களில் காமெடி களைகட்டும். நடிகன், ரிக்ஷா மாமா, வேலை கிடைச்சிடுச்சு, வால்டர் வெற்றி வேல், அமைதிப்படை, பாகுபலி ஆகிய படங்கள் இவரது நடிப்பில் முத்திரை பதித்தவை.

பாண்டிராஜ்

Director Pandiraj

இவர் நடிகர் அல்ல. இயக்குனர். இவரது இயக்கத்தில் படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். பசங்க படத்தின் இயக்குனர் என்றால் பாண்டிராஜ் என்று சட்டென்று சொல்லிவிடலாம். அந்தப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் இவர்.

ஒரு படத்தை மாறுபட்ட கோணத்தில் படமாக்குவதில் வல்லவர். வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மூடர்கூடம், கோலி சோடா, இது நம்ம ஆளு என இவரது படங்கள் அனைத்தும் சொல்லி அடித்தவை.

சரண்ராஜ்

அப்போ இவரது வில்லத்தனமான வேடங்கள் சிறு குழந்தைகளையும் மிரள வைக்கும். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசை அமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர். ரஜினிகாந்தின் படங்களில் பெரும்பாலும் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார்.

தர்மதுரை, பாட்ஷா, வீரா, பாண்டியன் படங்களிலும் ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் ஜென்டில்மேன், கமலுடன் இந்திரன் சந்திரன் ஆகிய படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

K.பாக்கியராஜ்

கோபிசெட்டிப்பாளையத்தை அடுத்த வெள்ளான்கோவிலில் பிறந்தவர் இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ். இவர் திரைக்கதையில் மன்னன் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இது தவிர தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என்றும் இவருக்கு பல முகங்கள் உண்டு.

இவரது குரு பாரதிராஜா. இவரிடம் உதவி இயக்குனராக 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரெயில் படங்களில் பணியாற்றியுள்ளார். சுவரில்லாத சித்திரங்கள், எங்க சின்ன ராசா, மௌனகீதங்கள், இன்று போய் நாளை வா, இது நம்ம ஆளு, சின்ன வீடு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு இவரது படங்களில் தனி முத்திரை பதித்தவை.

R.சுந்தரராஜன்

இவரும் ஒரு இயக்குனர் தான். ஆனால் நகைச்சுவை நடிகராகவும் திகழ்ந்துள்ளார். இவரது இயக்கத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் வைதேகி காத்திருந்தாள். இந்தப்படத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார். பாடல்கள் அனைத்தும் தேன் சிந்தும் ரகம்.

பயணங்கள் முடிவதில்லை, குங்குமச்சிமிழ், மெல்லத்திறந்தது கதவு, திருமதி பழனிச்சாமி ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் தனி முத்திரை பதித்தவை. சாமி போட்ட முடிச்சு, பொண்டாட்டி ராஜ்யம், பரதன், உடன்பிறப்பு, வீரத்தாலாட்டு, பெரியண்ணா, நட்புக்காக ஆகிய படங்களில் நடித்துள்ளர்.

பாண்டியராஜன்

இவருக்கு நடிகர், இயக்குனர், குணச்சித்திர நடிகர் என 3 முகங்கள் உண்டு. இவரது ஆரம்பகால படங்கள் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தன. அவற்றில் ஆண்பாவம், நெத்தி அடி, மனைவி ரெடி, சுப்பிரமணிய சாமி, கோபாலா கோபாலா ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. பஞ்சுமிட்டாய், குரு உச்சத்துல இருக்காரு, ஆரம்பமே அட்டகாசம் ஆகிய படங்களைச் சொல்லலாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top