ஹாலிவுட்டில் இருந்து தமிழில் காப்பி அடிக்கப்பட்ட டாப் 5 சீன்கள்... அட அந்த இயக்குனர் படக்காட்சிகள் மிஸ்ஸிங்...
தமிழ் சினிமாவில் ஹிட்டான சில படங்களில் கூட ஹாலிவுட் வாடை அடிக்கப்பட்டுள்ளது. அங்கு நன்கு பேசப்பட்ட சில காட்சிகளை அப்படியே அலேக்காக தூக்கி வந்து இங்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
துப்பாக்கி:
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய மாஸ் ஹிட் திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தின் இடைவேளை காட்சிக்கு இன்று வரை விசில் பறக்கும். ஆனால் இந்த காட்சி 2008ல் ஹாலிவுட்டில் ரிலீஸான டேக் படத்தில் இருந்து எடுத்திருக்கிறார்களாம்.
சிவா மனசுல சக்தி:
2009ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படம் சிவா மனசுல சக்தி. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஆர்யா இடம் பெறுவார். அவர் ஜீவாவிடம் பேசும் அந்த கிளைமேக்ஸ் காட்சி தி சாஸி கேர்ள் என்ற ஆங்கில படத்தில் இருந்து தான் சுடப்பட்டதாம்.
இதையும் படிங்க: அன்பே சிவம் படம் எனக்கு கொடுத்த தண்டனை… கிரி படம் தான் என்னை காப்பாத்தியது… வருத்தப்பட்ட சுந்தர்.சி…
அயன்:
கே.வி. ஆனந்த இயக்கத்தில் வெளியான படம் அயன். இந்த படத்தில் சூர்யா, பிரபு, தமன்னா, ஜெகன் ஆகியோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க கடத்தல் சார்ந்த உருவாக்கப்பட்டிருந்த இந்த கதையில் ஒரு காட்சியில் ஜெகன் போதை உருண்டைகளை முழுங்கி இருப்பார். அது வயிற்றுக்குள் வெடித்தும் விடும். இந்த காட்சி மரியா ஃபுல் ஆப் கிரேஸ் என்ற ஆங்கில படத்தில் இருந்து சுட்டு இருக்கிறார்.
குஷி:
விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் குஷி. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய் தனது தாயின் பெயரை சொல்லி பேசிக்கொண்டு அவருக்கு லவ் யூலாம் சொல்வார். அது ஆங்கிலத்தில் வெளியான லவ் ஸ்டோரி படத்தில் இருந்து எடுக்கப்பட்டதாம்.
கரகாட்டக்காரன்:
கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸாக அமைந்தனர். அந்த காமெடியை பல வருடம் கடந்து இப்போது பார்த்தாலும் சிரிப்பு வரும். அதில் ஹிட்டான வாழைப்பழ காமெடியும் ஆட்டைய போட்டது தானாம். அமெரிக்காவின் அபோட் அண்ட் கோஸ்டெல்லா என்ற டிவி நிகழ்ச்சியில் வந்த வாழைப்பழ காமெடியை உருவி தான் இப்படத்தில் எடுத்திருந்தார்களாம்.