ஆண் - பெண் நட்பின் பெருமையை பேசிய படங்கள்! ஒரு பக்கம் மனைவி.. ஒரு பக்கம் தோழி என பேலன்ஸ் செய்த மேடி.

maddy
Tamil Movies: தமிழ் சினிமாவில் பல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைப் பார்த்து வருகிறோம். பெரும்பாலும் காதலை மையப்படுத்தி ஏகப்பட்ட படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்கு இணையாக நட்பின் பெருமையை சொல்லும் படங்களும் வந்திருக்கின்றன. அந்த வகையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பை விளக்கிய படங்களை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
பிரியாத வரம் வேண்டும்: இதுவும் நட்பின் ஆழத்தை ஆழமாக சொன்ன திரைப்படம். பிரசாந்த் மற்றும் ஷாலினி இந்தப் படத்தில் முதலில் நண்பர்களாக பழக காலப்போக்கில் அந்த நட்பில் ஒரு காதல் இருப்பதை இருவரும் உணர கடைசியில் அவர்கள் ஒன்று சேர்வதுதான் கதை. ஆனால் படமுழுக்க நட்பின் பெருமையை அழகாக விளக்கி சொன்ன படமாக பிரியாத வரம் வேண்டும் திரைப்படம் அமைந்திருக்கும்.
இதையும் படிங்க: ரஜினி 171 படத்தில் இவர்தான் வில்லன்!.. இது கன்ஃபார்ம் நியூஸ்!.. எதிர்பார்க்கவே இல்லையே!…
ஆட்டோகிராப்: சேரன் இயக்கத்தில் அவரே நடித்த படம் இது. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பெண்களை காதல் கொள்ளும் சேரன் கடைசியில் நட்போடு இணைவதுதான் கதை. இதில் சேரனுக்கு தோழியாக சினேகா இந்தப் படத்தில் நடித்திருப்பார். இருளில் சிக்கிக் கொண்டிருக்கும் சேரனுக்கு தோள் கொடுக்கும் தோழியாக சினேகா நடித்திருப்பார். கடைசி வரை இருவரும் நண்பர்களாகவே இருப்பார்கள்.
பிரியமான தோழி: தன் கணவருடன் எந்த பெண்ணையும் பேச விடாத மனைவிகளுக்கு மத்தியில் தன்னையும் விட தோழியின் மீது அதிக பாசம் வைத்திருக்கும் கணவன் அமைந்தாலும் அதை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு செல்லும் ஒரு கேரக்டரில் ஜோதிகா நடித்திருப்பார். தன் கணவரின் தோழிக்கு எப்படியாவது நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்பதற்காக கணவருடன் சேர்ந்து மனைவியும் சிரமப்படுவது அழகான காட்சி. இப்படத்தில் மாதவன் மற்றும் ஸ்ரீதேவி சிறு வயதிலிருந்தே நண்பர்களாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காட்சியை நகர்த்துவது அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
இதையும் படிங்க: இதுக்காடா நீ சினிமாவுக்கு வந்த?!. கமலிடம் கோபப்பட்ட ஜெமினி கணேசன்.. நடந்தது இதுதான்..
பெங்களூர் டேஸ்: ஆண்களுடன் பேசக்கூடாது, பழக கூடாது என அந்த காலத்தில் இருந்தே சொல்லிக் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள் மத்தியில் இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமானது. நண்பர்களை பிரிய முடியாமல் திருமணமானாலும் கணவருடன் செல்ல தயங்கும் தோழி. இதில் நிவின் பாலி, துல்கர் சல்மான், பகத் பாசில், நஸ்ரியா ஆகியோர் நடித்திருப்பார்கள். மூன்று நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பு பற்றிய கதைதான் பெங்களூர் டேஸ்.