3 மணி நேரம் உட்கார்ந்து பார்த்து போரடிச்ச திரைப்படங்கள்! ‘அஞ்சான்’ படத்தால் மார்கெட் இழந்த லிங்குசாமி

Published on: November 25, 2023
anjan
---Advertisement---

Boring Movies: சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம்தான். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் விலகி தன் நேரத்தில் ஒரு மூன்று மணி நேரத்தை ரிலாக்சாக கழிக்க தேடி வரும் ஒரு அம்சம்தான் திரையரங்கம்.

ஒரு மூன்று மணி நேரத்தையாவது பயனுள்ளதாக கழிக்கலாமே என்ற எண்ணத்தில் படங்களை பார்க்க வருகிறார்கள். ஆனால் அதில் ஒரு சில படங்கள் ‘இதுக்கு வராமலேயே இருந்திருக்கலாம்’ என்ற மன நிலையை உருவாக்கி விடுகிறது.

இதையும் படிங்க: விஜய் செஞ்ச வேலையில் அஜர்பைசானில் இருந்து கிளம்பிய அஜித்?!.. இது என்னடா அக்கப்போரு!..

எடுக்கிற படங்கள் ஒரு சில நேரத்தில் ரசிகர்களை ஏமாற்றி விடுகிறது. முன்னணி நடிகர்களுக்காக அவரவர் ரசிகர்கள் முண்டியடித்து சண்டைப் போட்டுக் கொண்டு படத்தை பார்க்க செல்கின்றனர். ஆனால் சில சமயங்களில் இதெல்லாம் ஒரு படமா? டோட்டல் வேஸ்ட் என்று சொல்ல வைத்து விடுகின்றது.

அப்படிப் பட்ட படங்களைத்தான் இப்போது பார்க்க போகிறோம். விஷால் நடிப்பில் வெளிவந்த படம்தான் தோரணை. 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருப்பார். ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த இந்தப் படம் ரசிகர்களை அந்தளவு திருப்திபடுத்தவில்லை.

இதையும் படிங்க: ஜிகினமணியாக மாறிய கீர்த்தி ஷெட்டி!.. உடலை ஒட்டிய ஆடையில் சும்மா உஷ்ணத்தை கிளப்புறாரே!..

கார்த்தியின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த படம் காற்று வெளியிடை. மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் காதல் கலந்த ஒரு திரில்லர் திரைப்படமாக அமைந்தது. இந்தப் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் அவருக்கு ஏற்ப அமையவில்லை என்பதுதான் பலரின் கருத்தாக அமைந்தது. கார்த்தியின் கெரியரில் மொக்க வாங்கிய படமாகவும் அமைந்தது.

ரஜினியின் கெரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது பாபா. அந்தளவுக்கு கடுமையான விமர்சனத்திற்கு ஆளான திரைப்படம்தான் பாபா. படம் வெளியாவதற்கு முன்பாகவே ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து பெரிய ஹைப்பை ஏற்படுத்தினர். ஆனால் ரிலீஸான பிறகு பாபா திரைப்படம் அனைவரையும் ஏமாற்றியது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: அமீர் சொல்றது தான் உண்மை!.. ஞானவேல் ராஜா சொல்றது பொய்.. சாட்சிக்கு வந்த சசிகுமார்!..

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் சுறா. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஏண்டா நடித்தோம் என்று தமன்னாவே வருத்தப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட மொக்கப் படமாக அமைந்ததுதான் சுறா. விஜய் இந்தப் படத்தில் எப்படி நடித்தார் என்றுதான் யோசிக்க வைத்தது.

லிங்குசாமி கெரியரில் பெரிய அடிவாங்கிய திரைப்படமாக அமைந்தது அஞ்சான். சூர்யா, காஜல் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் அந்தப் படத்தில் ராஜுபாய் கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றியிருந்தால் படம் ஓடியிருக்கும் என்றுதான் இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் இருந்தே லிங்குசாமி கெரியரும் உடைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி ஏகப்பட்ட படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.