நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய...சிவ சிவ என சொல்லி வந்த படங்கள்...

by sankaran v |   ( Updated:2023-02-18 16:19:47  )
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய...சிவ சிவ என சொல்லி வந்த படங்கள்...
X

Doctor Siva

சிவனின் நாமத்தைச் சொல்ல துன்பங்கள் அகன்றோடும் என்பார்கள். சிவனின் நாமத்தைச் சொல்ல வாழ்க்கையில் எத்தகைய தடைக்கற்கள் வந்தாலும் அவை படிக்கற்களாக மாறும்.

சிவனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தால் வீடுபேறு கிட்டும். அப்படிப்பட்ட சிவனின் நாமத்தைத் தமிழ்த்திரை உலகம் மட்டும் விட்டுவிடுமா? படங்களின் பெயர்களை சிவ நாமம் தாங்கி வெளியிட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போமா...

சிவா

Siva

1989ல் வெளியானது. இளையராஜாவின் இசையில் அமீர்ஜான் இயக்கினார். ரஜினிகாந்த், ஷோபனா, ரகுவரன், வினுசக்கரவர்த்தி, டெல்லி கணேஷ், சௌகார் ஜானகி, ராதாரவி, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அட மாப்பிள்ளை, அடி கண்ணாத்தாள், அடி வான்மதி என், இரு விழியின் வழியே, வெள்ளிக்கிழமை ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன. இது பக்திப்படம் இல்லை என்றாலும் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் சிவா. படமும் அடி தடி, பாட்டு என பட்டையைக் கிளப்பியது.

சிவலீலை

Sivaleelai

2017ல் வெளியான படம். தயாரிப்பு, திரைக்கதை, இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் வி.சுவாமிநாதன் கவனித்துக் கொண்டார்.

கே.ஆர்.விஜயா, சித்தாரா, கவிதா, கல்யாண் குமார் மற்றும் பலர் நடித்த படம். இது அருமையான பக்திப்படம். பக்தர்களுக்கு சிவனின் லீலைகள் பார்க்க பார்க்க பரவசம் தரும்.

சிவபுரம்

Sivapuram

2009ல் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம். பிருத்விராஜ், காவ்யா மாதவன், ரியாசென், கலாபவன் மணி, பிஜூமேனன், நெடுமுடி வேணு, மனோஜ் கே ஜெயன், கொச்சின் ஹனீபா, ரேவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

எம்.ஜி.ராதாகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இது ஒரு பக்தி கலந்த த்ரில்லர் படம். கிராபிக்ஸ் கலக்கலாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்க வேண்டிய படம்.

டாக்டர் சிவா

1975ல் வெளியான படம். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கியுள்ளார். சிவாஜி, மஞ்சுளா உள்பட பலர் நடித்துள்ளனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடல்கள் அனைத்தும் செம மாஸ்.

சிவன் மகிமை

Sivan Mahimai

இது ஒரு பக்தி திரைப்படம். 2020ல் வெளியானது. சிவனின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லும் படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். ஆனால் இந்தப்படம் வந்ததும் தெரியவில்லை.

போனதும் தெரியவில்லை. சிவனின் மகிமைகளை எடுத்துச் சொல்வதால் நாம் அவசியம் காண வேண்டிய படங்களுள் இதுவும் ஒன்று.

Next Story