பிளாக்பஸ்டர் 2023: டாப் 5 அதிக வசூலை பெற்ற தமிழ் படங்கள்!..
Top 5 movies: தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வருடமும் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அந்த எல்லா படங்களும் நல்ல வசூலை பெறுகிறதா என்றால் இல்லை. ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களை நம்பி ரூ.150 கோடி பட்ஜெட்டுக்கும் மேல் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
ஆனால், அதுவும் சில நேரங்களில் சறுக்கி விடுகிறது. சில சமயம் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் உருவாகி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பிளாக் பஸ்டர் அடிக்கும். இதற்கு பெரிய உதாரணமாக ‘லவ் டுடே’ படத்தை சொல்ல முடியும். 2023ம் வருடம் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த டாப் 5 வசூலை பெற்ற படங்கள் பற்றி பார்ப்போம்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் வெளியான சூப்பர்ஹிட் த்ரில்லர் படங்கள் – ஒரு பார்வை
இதில் முதலிடத்தை ரஜினியின் ஜெயிலர் படம் பிடித்துள்ளது. சில ஏமாற்றங்களை கொடுத்த ரஜினி நெல்சனின் இயக்கத்தில் சொல்லி அடித்த திரைப்படம்தான் ஜெயிலர். இப்படம் ரூ.605 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. இதற்கு மேல் முழு வசூலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை. இப்படத்தம் ரூ.700 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அடுத்து, இரண்டாவது இடத்தை விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பிடித்துள்ளது. இந்த படம் ரூ.503 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்புக்கு ஆயிரம் கோடி வசூலை இப்படம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இப்படத்தின் திரைக்கதை, குறிப்பாக இரண்டாம் பாதி ரசிகர்களை கவரவில்லை. அதனால், வசூல் குறைந்துவிட்டது.
இதையும் படிங்க: எம்ஜிஆர், சிவாஜிக்கே டஃப் கொடுத்த அந்த கட் அவுட்.. இப்படி எல்லாமா நடந்துச்சு…
3வது இடத்தை மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெற்றுள்ளது. இப்படம் ரூ.343 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அதேநேரம், பொன்னியின் செல்வன் 2 படம் முதல் பாகத்தை விட கொஞ்சம் குறைவான வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது.
4வது இடத்தை விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இப்படம் ரூ.302 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அடுத்து 5வது இடத்தில் அஜித்தின் துணிவு படம் பெற்றுள்ளது. இப்படம் 201 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் டாப் 5 இடங்களில் விஜய் 2 இடங்களை பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டை விஜய்: தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இதோ.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?..