துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். அதிலும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதிலும் இவர் நடிப்பில் வெளியான சீதாராம் திரைப்படம் பேன் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
இதையும் படிங்க: வீர தீர சூரன் ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!.. தமிழ்நாட்டு உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!…
இதனால் மலையாளத்தில் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகின்றார் நடிகர் துல்கர் சல்மான். அந்த வகையில் கடைசியாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கின்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது.
தெலுங்கில் நேரடி படமாக வெளியாகி இருந்தாலும் தமிழ், மலையாளம் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் ஆகிய திரைப்படங்களுடன் போட்டியாக லக்கி பாஸ்கர் திரைப்படமும் வெளியாகி இருந்தது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த வரவேற்பு பெற்ற படமாக லக்கி பாஸ்கர் திரைப்படம் அமைந்தது.

தமிழில் முதலில் குறைவான திரையரங்குகளில் மட்டும் ரிலீசான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்ததால் அடுத்தடுத்த தினங்களில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வெளியாகி வந்தது. ஒரு நடுத்தர குடும்பத்தில் இருக்கும் துல்கர் சல்மான் பேங்கில் கேஷியராக வேலை பார்த்து வருகின்றார்.
அப்போது குடும்ப சூழ்நிலை காரணமாக பணத்தை கையாள செய்கின்றார். அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கின்றார் என்பதை மையமாக வைத்து படத்தின் கதையை இயக்கியிருந்தார் வெங்கி அட்லூரி. படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: மஞ்சு வாரியர்னா இனிக்குது!.. உதவி இயக்குனருனா கசக்குதா!.. வெற்றிமாறனை கிழித்த அந்தணன்..!
தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழகத்திலும் இந்த திரைப்படம் சக்க போடு போட்டது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி என்கின்ற மிகப்பெரிய வசூலை செய்திருக்கின்றது லக்கி பாஸ்கர் திரைப்படம். இந்த திரைப்படத்தை தமிழில் மட்டும் 15 முதல் 20 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகின்றது. கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் திரைப்படமும், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படமும் இந்த அளவுக்கு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
